tamilnadu

img

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு... சிஐடியு, சிபிஎம் முயற்சியால் ரூ.5.50 லட்சம் நிவாரணம் கிடைத்தது....

சாத்தூர்:
சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் உள்ள சந்தனமாரி என்பவருக்குச் சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலைஇயங்கி வருகிறது. இந்த ஆலையில் வெள்ளியன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் பத்துக்கும் மேற்பட்ட அறைகள் வெடித்துச் சிதறின.  19 தொழிலாளர்கள்  உடல் கருகிஉயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலியானவர்கள் விபரம்: அன்பின் நகர் தனசேகரன் மகள்சந்தியா(18), மேலபுதூர்  நேசமணி(32), நடுச்சூரங்குடி கற்பகவள்ளி (22),  பாக்கியராஜ் (40), அவரது மனைவி செல்வி, கருப்பசாமி (57), ஏழாயிரம்பண்ணை தங்க லெட்சுமி (46), மார்க்கநாதபுரம் சின்னத்தம்பி (36), சத்திரப்பட்டி ரவிச்சந்திரன் (68), ஓ.மேட்டுப் பட்டி ரெங்கராஜ்(57), தென்றல் நகர் தனலெட்சுமி(45), சின்னகொல்லபட்டி  உஷா(35), படந்தால் கண்ணன்(48), சங்கரநாரா யணன் (60), கோபால்(30), பஞ்சவர்ணம், சாத்தூர் கீழகாந்தி நகர்பூமாரி (54) ஆகியோர் பலியாயினர். இதில் இருவரது உடல்கள்மிகவும் கருகிய நிலையில் உள்ளதால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன், சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா,  பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.மகாலட்சுமி, மாவட்டத் தலைவர் எம்.சி.பாண்டியன், மாவட்டப் பொருளாளர் கே.முருகன்,   மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.சுப்பாராஜ், கே.விஜயகுமார், எஸ்.சரோஜா, எம்.சுந்தரபாண்டியன், பி.பாலசுப்பிரமணியன், வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலாளர் முனியசாமி, விவசாயிகள் சங்கமாவட்டப் பொருளாளர் மனோஜ்குமார், சிஐடியு தலைவர் ஏ.சீனிவாசன், டேனியல், வழக்கறிஞர் வி.ஏ.விஸ்வநாத், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ஜெயந்தி ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சாத்தூர், சிவகாசி அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று உயிரி ழந்தவர்கள் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினர். காயமடைந்த வர்களுக்கு ஆறுதல் கூறி அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.

ஆலை நிர்வாகம், உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பங் களுக்கும் தர வேண்டிய ரூ.5லட்சம் நிவாரணம்,  ஈமச்சடங்கு நிதி ரூ.50 ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ.5.50 லட்சம் உடனடியாக வழங்க வேண்டுமென மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு தலைவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, அனைத்துக் குடும்பங் களுக்கும்  நிவாரணத் தொகை மருத்துவமனையிலேயே வழங்கப்பட்டது. இதையடுத்து, உடற்கூராய்வுக்குப் பின் உறவினர்கள் பட்டாசு தொழிலாளர் களின் உடல்களை கண்ணீர் மல்க தூக்கிச் சென்றனர். 

பொதுவாக பட்டாசு ஆலைகளை லீசுக்கு விடக் கூடாது. ஆனால், மாரியம்மாள்  பட்டாசு ஆலையை உரிமதாரர் பலருக்கு ஒவ்வொரு கட்டடமாக லீசுக்கு விட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.  விபத்திற்குஉள்ளான பட்டாசு ஆலையின் அறைகளை ஏழாயிரம் பண்ணையைச்  சேர்ந்த சக்திவேல், வேல்ராஜ், பொன்னுப்பாண்டி, கீழச்செல்லையாபுரத்தைச் சேர்ந்த சிவக்குமார், சாத்தூரைச் சேர்ந்த ராஜா ஆகியோர் லீசுக்கு எடுத்துள்ளனர்.சப் காண்ட்ராக்ட் எடுத்த ஐந்துபேரும் அதிகளவில் பட்டாசுகளைவிதிமுறைகளை மீறி தயாரித்துள் ளனர். ஒரு அறையில் நான்கு பேர் மட்டுமே பட்டாசு தயாரிக்க வேண்டும். ஆனால், எட்டு முதல்பத்து பேர் வரை பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெட்ட வெளியில் மரத்தடி நிழலில் அதிக வீரியம் மிக்க பேன்சி ரக வெடிகளை தயாரிக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது விசார ணையில் தெரிய வந்துள்ளது.

மணி மருந்து
பட்டாசு தயாரிக்கப் பயன்படும் வேதிப் பொருட்களால் ஆனகலவையை  மணி  மருந்து எனக்கூறுவர். இதை தனி உலர் களத்தில் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு, நிழலில் காய வைக்க வேண்டும். அதன் பிறகு தனி அறையில் பட்டாசுகளில் மணி மருந்தை செலுத்த வேண்டும். அதன் பிறகே, பேக்கிக் செய்ய வேண்டும். ஆனால், மாரியம்மாள் பட்டாசு ஆலையில் அனைத்துப் பணிகளும் ஒரே இடத்தில் நடைபெற்றுள்ளது. மணி மருந்துக் கலவைநிழலில் உலர்த்தப்படவில்லை யென கூறப்படுகிறது.விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2000 முதல் 2020-ம் ஆண்டுவரை 336 பட்டாசு விபத்துகள் நடந்துள்ளன. இதில் 482 தொழிலாளர்கள் உடல்கருகி உயிரிழந்துள்ளனர்.  கடந்த பத்தாண்டுகளில் (2010-2020) மட்டும் 161 விபத்துக்கள் நடைபெற்றுள்ளது. இதில் 310 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

அதிகாரிகள் அலட்சியமே காரணம்
பட்டாசு ஆலை விபத்துகளைத் தவிர்க்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் பட்டாசு பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டுள் ளது. இந்தக் குழுவில் வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறை துணை இயக்குநர், மாவட்ட வருவாய் அலுவலர், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தக்குழு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்து கூட்டம் நடத்தி குறைபாடுகளைக் களைய வேண்டும். ஆனால் இந்தக் குழு முறையாகக் கூடுவது இல்லை. ஆய்வுகளும் நடத்துவதில்லை. ஆய்வு நடத்தினால் தானே குறைகளைக் களைய? என தொழிற் சங்கத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.வேலைக்குச் சென்றால் உயிரிழக்கக் கூடும் எனத் தெரிந்தும் ஏன்? பட்டாசு தயாரிக்கும் வேலைக்கு செல்கிறீர்கள் என தொழிலாளர்களிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “உயிர் வாழ பணம் தேவை. விவசாயம் இங்கு இல்லை. எல்லாம் வானம்பார்த்த பூமிதான். வேறு தொழிலும் இங்கு இல்லை.   பிழைப்புக்குவேறு வழியின்றி இந்த தொழி லுக்கு செல்கிறோம் என கண்ணீர் மல்கக் கூறினர்.

தொகுப்பு : ஜெயக்குமார், விருதுநகர்