tamilnadu

img

அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் பணியிடை நீக்கம் அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூன் 3- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் மு.சுப்பிரமணியன் பணி ஓய்வு நாளன்று பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோவையில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் அனைத்துத்துறை அரசு ஊழியர்களின் நலனுக்காக போராடிய அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் மு.சுப்பிரமணியன் தனது 32 ஆண்டு கால அரசுப் பணியில் நேர்மையாகவும், சிறந்த முறையில் பணியாற்றியவர். மேலும் அரசு ஊழியர், ஆசிரியர்களின் போராட்டஅமைப்பான ஜாக்டோ- ஜியோஅமைப்பினை ஒருங்கிணைத்துபலகட்டப் போராட்டங்களை நடத்தியவர். இவர் அரசு பணியில்ஓய்வுபெறும் நாளில் அரசாணைகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பாணைக்கு முரணாகத் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்செயலை வன்மையாக கண்டிப்பதுடன் தற்காலிகப் பணி நீக்கத்தைத் திரும்பபெற தமிழக அரசைவலியுறுத்தி தமிழ்நாடு அரசுஊழியர் சங்கத்தின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் குமார், ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் அருளானந்தம், தங்கபாசு, முத்துராசு மற்றும் சுந்தர்ராமன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமானோர் பங்கேற்று அதிமுக அரசின் ஊழியர் விரோதப் போக்கைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.