சிதம்பரம், மார்ச் 18- கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரி வித்துள்ளது. இந்நிலையில், கடலூர் மாவட்டம், ஆயிபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவர்களை செவ்வாயன்று சிறப்பு வகுப்புக்கு வரவைத்து பாடம் நடத்தியுள்ளார் தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார். இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கா.ரோஸ்நிர்மலாவிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் நடத்திய விசாரணையில், சிறப்பு வகுப்பு நடத்தியது உண்மை என தெரியவந்ததால் சுரேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.