சிவகங்கை, ஆக.2- சிவகங்கை குறிஞ்சி நகரில் மூன்று பேர் இறப்புக்கு காரணமான ஆதிக்க சாதி வெறியர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டுமென தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலி யுறுத்தியுள்ளது. அதப்படக்கியைச் சேர்ந்தவர் பாலமுரு கன். தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் சிவ கங்கை குறிஞ்சி நகரில் இரண்டு லட்சத் துக்கு ஒரு வீட்டை லீசுக்கு பிடித்துள்ளார். தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தை களையும் அங்கே குடியமர்த்திவிட்டு அயல் நாடு சென்று விட்டார். இவர்கள் வீட்டருகே குடியிருக்கும் கார்த்திகேயன் குடும்பம் கந்து வட்டி தொழில் நடத்தி வருகிறது. பாலமுருகன் வெளிநாட்டிலிருந்து அனுப்பிய பணத்தை அவரது மனைவி காளீஸ்வரியிடம் பிளாட் வாங்கித் தருவதாகக்கூறி பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் ஏமாற்றி வாங்கியுள் ளனர். பணத்தை திருப்பிகேட்ட காளீஸ்வ ரியை சாதி ரீதியாக இழிவுபடுத்திய கார்த்தி கேயன் குடும்பத்தினர் வன்கொடுமை செய் துள்ளனர்.
இந்தநிலையில் ஜூலை 16 ஆம் தேதி காளீஸ்வரி (34), அவரது மகள் மங்கை யர்திலகம் (13), அவரது இளைய மகன் அபி ஷேக் (9) ஆகிய மூன்றுபேரும் வீட்டிலி ருந்து சடலமாகமீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சிவகங்கை காவல் துறையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பி. கார்த்திகேயன், அவரது சகோதரி எம்.நாக ஜோதி, தாய பி.சுந்தரி மூவரையும் கைது செய்துள்ளனர். மூன்று பேரை இழந்து தவிக்கும் குடும் பத்தினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். கட்சி யின் மாவட்டச் செயலாளர் கே.வீரபாண்டி, சிவகங்கை ஒன்றியச் செயலாளர் உலக நாதன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் முத்துராமலிங்க பூபதி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் தென்னரசு ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறி நடைபெற்ற சம்ப வம் குறித்து கேட்டறிந்தனர். இந்த சம்பவம் குறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் மு.கந்தசாமி, மாவட்டச் செயலாளர் ஏ. பொன்னுச்சாமி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், “சிவகங்கை மாவட்ட நிர்வா கமும், காவல்துறையும் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் மீது விரைந்து நட வடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக குறிஞ்சி நகர் சம்பவத்தில் கார்த்திகேயன் மீது குண்டர்சட்டத்தின் கீழும் வழக் குப்பதிவு செய்யவேண்டுமென வலி யுறுத்தியுள்ளனர்”.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காளையார்கோவில், இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் அதிகளவில் வன்கொடுமைகள் நடந் துள்ளது. கந்து வட்டித் தொழிலில் ஈடுபடு பவர்கள் கொரோனா காலத்தில் கெடுபிடி வசூல் செய்வதும் அதிகமாகியுள்ளது என வும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சுட்டிக் காட்டியுள்ளது. குறிப்பாக காளையார்கோவில் ஆலங்குடி கிராமத்தைச் சேர்ந்த பாண்டி (43) என்பவரை ஆதிக்க மனோபாவமுள்ள சிலர் உடைகளைக் கழற்றி நிர்வாணப் படுத்தி அதை செல்போனில் படமெடுத்து அச்சுறுத்தியதில் அவர் உயிரிழந்தார் என்ப தையும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு நினைவூட்டியுள்ளனர்.