திருவள்ளூர், செப்.5- திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்தி ற்குட்பட்டது செஞ்சி பானம்பாக்கம் ஊராட்சி. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வரு கின்றனர். இந்த பகுதியை சேர்ந்த யாரேனும் இறந்தால் பானம்பாக்கத்தில் உள்ள சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்கின்றனர். இந்த சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிர மித்து விவசாயம் செய்வதாக கூறப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இறப்பு ஏற்படும் சமயங்களில் இறந்தவர்கள் உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல பாதை இல்லாததால் விளை நிலங்க ளில் இறங்கி எடுத்துச் செல்கின்றனர். இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் பல முறை மாவட்ட ஆட்சியர், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர், திரு வள்ளூர் தாசில்தார் என அதிகாரிகளிடம் மனு அளித்தும் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை அவர்கள் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த பகுதி மக்கள் தங்களுக்கு சுடுகாட்டுப் பாதையை முறையாக ஏற்படுத்தி தர வலியுறுத்தி பலமுறை போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். அதிகாரி கள் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியும் இதுநாள் வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் புதனன்று (செப்.4) பானம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார். அவரது உடலை உறவி னர்கள் மற்றும் கிராம மக்கள் வயல் வழியாக சுடு காட்டுக்கு எடுத்து சென்ற னர். காலதாமதம் செய்யா மல் சுடுகாட்டுக்கு செல்லும் பாதைக்கு தீர்வு கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.