சிவகங்கை, மார்ச்27- கொரானோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகத்தின் பணி சிறப்பாக உள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் வீரபாண்டி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:- :சிவகங்கை மாவட்டத்தில் கொரனா வைரஸ் பாதிப்பை தடுப்பதில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், மாவட்ட மருத்துவர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் அர்ப்பணிப்போடு செயல்படுகிறார்கள்.
சிவகங்கை மாவட்டத்தில் கொரானோ வைரஸ் பாதிப்பாளர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க அரசு மருத்துவக்கல்லுhரி மருத்துவமனை வளாகத்தில் ஏற்பாடு செய்திருப்பதும் அமராவதி புதுhர் பகுதியில் நான்காவது ராணுவ பயிற்சி மையத்தில் 212 வீடுகளை கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளானவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கக்கூடியது. அதே நேரத்தில், 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது .பலசரக்குக் கடைகள், காய்கறி கடைகள் திறந்து நடத்துவதற்கு காவல்துறையினர் அனுமதி மறுக்கின்றனர். கடைகளை மூடச் சொல்கின்றனர். மருத்துவமனை, கடைக்கு வரும் மக்களை கம்பால் அடிப்பது, உக்கி போடச் சொல்வது போன்ற மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. முககவசம் கிடைப்பதில் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது.ஒரு முககவசம் ரூ12 முதல் ரூ.20 வரை விற்றுக் கொண்டிருந்தது, தற்போது ரூ.30 முதல் ரூ. 50 வரை விற்கப்படுகிறது. சிவகங்கை நகராட்சியில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்கள் கையுறை இல்லாமல் பணிபுரிகிறார்கள்.அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்.