சிவகங்கை
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பேருந்து நிலையங்களில் பணியாற்றி வரும் டிக்கெட் கேன்வாசர்கள் 31பேருக்கு மற்றும் பணிமனைகளில் பேருந்தை சுத்தம் செய்கிற 4 தொழிலாளிகள் உட்பட 35 பேருக்கு தலா ஆயிரம் வீதம் ரூ.35ஆயிரம் அரசு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) வழங்கியுள்ளது. மேலும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை கரையில் வசிக்கும் மக்களுக்கு டீத்தூள்,முக கவசம், திருப்புத்தூர் அருகே வெள்ளூர் மக்களுக்கு முக கவசங்கள் ஆகியன சிஐடியு சார்பில் வழங்கப்பட்டது என சிஐடியு பொதுச் செயலாளர் தெய்வீரபாண்டியன் தெரிவித்தார்.