சிங்கப்பூர் : உலகமே கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடி வரும் நிலையில், பிரதமர் லீ ஹசியன் லூங்கின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி ஹலிமா யாகோப் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தை செவ்வாயன்று கலைத்தார். பொதுத் தேர்தலை நடத்தும் பொருட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
தற்போது சிங்கப்பூரில் கொரோனா தொற்று பரவல் வேகம் சற்று குறைவாக இருப்பதால், இந்த காலத்தில் தேர்தலை நடத்தத் திட்டமிட்டிருப்பதாகப் பிரதமர் லீ ஹசியன் லூங் தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கு வரும் ஜூன் 30 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் நடைபெறும். தேர்தல் நடைபெறும் தேதியைத் தேர்தல் துறை வெளியிடும். ஜூலை 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும். அன்றைய தினம் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.