ராஞ்சி:
மளிகைக் கடைகளில் மதுபானம் விற்பனை செய்யும் திட்டத்தை அறிமுகப் படுத்த ஜார்க்கண்ட் மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளது.ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.அங்கு முதல்வராக ரகுபர் தாஸ் இருந்து வருகிறார். இதனிடையே, கடந்த மூன்றுஆண்டுகளில், தனது கலால் வரிக்கொள் கையை இருமுறை திருத்திய ஜார்க்கண்ட் பாஜக அரசு, கடந்த 2017-இல் சொந்தமாக மதுக்கடைகளைத் திறந்தது. அடுத்ததாக, 2019 ஏப்ரல் மாதம், மதுக்கடைகளைத் தனியாருக்கு ஏலத்தில் விற்பனை செய்ய திருத்தம் கொண்டு வந்தது. தற்போது மளிகைக்கடையிலும் மது விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.இதன்படி, ஜிஎஸ்டி வரி செலுத்தும் மளிகைக் கடைகளும், ரூ. 30 லட்சம் வருவாய் உள்ள மளிகைக் கடைகளும் மதுவிற்பனை செய்துகொள்ளலாம். இதன் மூலம், ஆண்டுக்கு ரூ. 1500 கோடி வரை அரசுக்கு வருமானம் கிடைக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது.