சென்னை,ஏப்.14-இனி அடுத்து வரும் எந்த தேர்தலிலும் பாஜக, அதிமுக கூட்டணி கட்சிகள் வெல்லமுடியாத அளவிற்குஅவர்களுக்கு தோல்வியை கொடுக்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு உறுப்பினர்அ.சவுந்தரராசன் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வடசென்னை நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர்.வீ.கலாநிதிமத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் தயாநிதிமாறன் ஆகியோரை ஆதரித்து பேசினார்.அவர் தம் உரையில், பணமதிப்புஇழப்பு செய்த பாஜக அரசு புதியரூபாய் நோட்டுக்களின் அளவை ஏற்கனவே உள்ள ஏடிஎம் எந்திரத்தில்பொருந்தாத அளவிற்கு வடிவமைத்து விட்டதால் புதிய 1000, 500ரூபாய் நோட்டுக்கள் எடுக்க பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இது நிலக்கதவின் அளவை விடபெரிய அளவில் பீரோ வாங்கியதை போன்ற நிலையை அண்டாமூளை பிரதமர் மோடி ஏற்படுத்திவிட்டார். ஜிஎஸ்டி வரி விதிப்பால் இந்தியாவின் ஜவுளிதேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு தொழில் வளர்ச்சிபெற்ற திருப்பூர் பொருளாதாரம் நாசமானது. தொழில்நசிவால் ரூ 1.5லட்சம் கொடுத்து வாங்கிய தறிஎந்திரம் காயலான்கடையில் எடைக்கு விற்கும் அவலநிலை ஏற்பட்டது. எடப்பாடி வெற்றி பெற்றால் ரூ 2 ஆயிரம் தருவேன் என பிரச்சாரம் செய்கிறார். போக்குவரத்து தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ரூ 7 ஆயிரம் கோடிகொடுக்க துப்பில்லை, பிஎஸ்என்எல் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாதவர்கள் வெற்று வாக்குறுதியை கொடுத்துவருகின்றனர். நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை இருப்பாக பெற்று தன்னாட்சி அதிகாரம்பெற்ற ரிசர்வ் வங்கி வைத்திருக்கும்,இது திவாலாகும் வங்கிக்கு உதவுவதற்கான ஏற்பாடாகும். ஆனால் இந்த ரிசர்வ் வங்கியின் நிதியை தங்கள் விரும்பம் போல் திட்டச்செலவுக்கு எடுத்து மோடி அரசு செலவு செய்வதாக வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல் விமர்சித்துள்ளார். மோடிஅரசின் இந்த செயல் குடிப்பழக்கத்திற்காக மனைவியின் தாலியைஅறுத்த கணவனின் செயலைப்போன்றது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுக்கு ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர இந்த அரசு மறுப்பதற்கு காரணம் அளவுக்கு அதிகமாக வரிவசூலை செய்வதால் தான். கேஸ் மான்யத்தை ஏன் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். பெட்ரோலிய நிறுவனங்கள் மூலம் நேரடியாக வழங்கலாமே. வங்கிகணக்கில் போடுவதாக சொல்லிபடிப்படியாக நிறுத்தும் ஏமாற்று வேலைக்காகவே இந்த நடைமுறையை மத்திய அரசு பின்பற்றுகிறது. மாட்டின் பெயரால் மனிதக்கொலைகளை செய்துவரும்பாஜக அரசால் சிறுபான்மை,தலித்மக்கள், பெண்குழந்தைகளுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ராமருக்கு கோயில் கட்டுவது தான் நோக்கம் என்றால் அவர்கள்சொந்தநிலங்களில் கட்டிக்கொள்ளலாமே. குறிப்பிட்ட இடத்தில் தான்கட்டுவோம் என சொல்வது மதக்கலவரத்தை தூண்டத்தானே. பாஜகவிடமிருந்து ராமரையும் இந்துக்களையும் காப்பாற்றவேண்டிய கடமை கம்யூனிஸ்டுகளுக்கு உள்ளது.மண்டியிட்டு வணங்கிக்கொண்டிருக்கும் அதிமுக அடிமை ஊழல் ஆட்சியை துடைத்தெரியவேண்டும். யாரையும் அடிமைப்படுத்தும், எதிர்ப்போரை தேசவிரோதி என முத்திரை குத்தும் சர்வாதிகார பாஜகமதவெறி ஆட்சியை விரட்டியடிக்கவேண்டும். முதற்கட்டமாக நடைபெறஉள்ள 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் 9ல் திமுக வென்றாலே அதிமுகவுக்கு ஏழரை துவங்கி விடும்.எனவே வரும் மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தயாநிதிமாறனையும், கலாநிதி வீராசாமியையும் வெற்றி பெற செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
முன்னதாக திருவிக நகர் பேருந்து நிலையத்தில் வேட்பாளர் கலாநிதியை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்திற்கு எஸ்.கோட்டீஸ்வரன் தலைமை தாங்கினார். தே.பா.தமிழ்மணி வரவேற்புரையாற்றினார். மாவட்டச்செயற்குழு உறுப்பினர்ஆர்.லோகநாதன், பகுதிச்செயலாளர் எஸ்.மதிவாணன், ராம்சேகர், சீனிவாசன், அயூப்,பா.அசோகன்(சிபிஎம்) ஐசிஎப்.முரளிதரன், ஏ.நாகராஜன் (திமுக) ,தெ.இரா.சுபாஸ்சந்திரபோஸ்(விசிக), ஆகியோர் பேசினர்.எழும்பூர் பெரியமேட்டில் மத்தியசென்னை வேட்பாளர் தயாநிதியை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மனோகரன் தலைமை தாங்கினார். பாலு வரவேற்புரையாற்றினார். பி.கே.சேகர் பாபு எம்எல்ஏ, கே.எஸ்.ரவிச்சந்திரன் எம்எல்ஏ, சைதை சாதிக், (திமுக), தென்றல்நிஜார்(மதிமுக), இளங்கோ, இரா.செல்வம் (விசிக), ஜாபர் (மனிதநேயமக்கள்கட்சி), கிஷோர்(காங்கிரஸ்), மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்கட்சி மாவட்டசெயற்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், பகுதிச்செயலாளர் கே.முருகன், சரளா, ராஜாமணி, ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பேசினர்.