tamilnadu

img

ஜேஎம்எம் சட்டமன்ற தலைவராக ஹேமந்த் சோரன் தேர்வு

ஜார்கண்ட்டில் புதிய ஆட்சி

ராஞ்சி, டிச.24-  ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ள ஜேஎம்எம் - காங்கி ரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. ஜேஎம்எம் கட்சியின் சட்டமன்றத் தலைவராக ஹேமந்த் சோரன், செவ்வாயன்று நடைபெற்ற அக்கட்சியின் சட்டமன்ற  உறுப்பினர் கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே, ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சியின் தலைவர் பாபு லால் மராண்டியையும் ஹேமந்த் சோரன் நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களின் நில உரிமையை பறித்த பாஜக ஆட்சியை சட்டமன்றத் தேர்த லில் படுதோல்வியடையச் செய்து, அந்த மாநில மக்கள் அகற்றியுள்ளனர். 

81 தொகுதிகளைக் கொண்ட ஜார் கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல் 5 கட் டங்களாக நடைபெற்றது. டிசம்பர் 23 அன்று நடைபெற்ற வாக்கு எண் ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தள ஆகிய கட்சி களின் கூட்டணி 47 இடங்களில் வெற்றி பெற்றது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 30 தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற் றன. இந்த வெற்றியின் மூலம் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் முதலமைச்சர் ஆகி றார். ஹேமந்த் சோரன், தான் போட்டி யிட்ட தும்கா ,பார்ஹைத் ஆகிய 2 தொகு திகளிலும் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் பாஜகவை மாநில மக்கள் படுதோல்வியடையச் செய் துள்ளனர். பாஜக 25 தொகுதிகளில் மட்டுமே வென்றது. ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா 3 தொகுதிகளிலும், ஜார்கண்ட் மாணவர் சங்கம், சுயேச்சை கள் ஆகியோர் தலா 2 தொகுதிகளி லும், தேசியவாத காங்கிரஸ், மார்க் சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.

பாஜக முதல்வரே தோல்வி

ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதி யில் போட்டியிட்ட பாஜக அரசின் முதல மைச்சர் ரகுபர் தாஸ் தோல்வி அடைந்தார். மாநில பாஜக தலைவர் லட்சுமண் கிலுவாவும் தோல்வியை தழுவினார். 

புதிய அத்தியாயம்

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கி ரஸ் கூட்டணிக்கு மக்கள் தெளிவான பெரும்பான்மை அளித்துள்ளனர். புதிய அத்தியாயம் தொடங்குகிறது என்று ஹேமந்த் சோரன் கூறினார்.

5-வது மாநிலம்

மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் மோடி தலை மையிலான மத்திய பாஜக அரசு மீதும் பாஜக ஆண்ட மாநில அரசுகள் மீதும் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதனால் கடந்த ஓராண்டில் மட்டும் பாஜக 5 மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ளது. ராஜஸ்தான், மத்தி யப்பிரதேசம், சத்தீஸ்கர், மகா ராஷ்டிரா ஆகியவற்றை தொடர்ந்து, பாஜக ஆட்சியை இழந்த 5-வது மாநில மாக ஜார்கண்ட் உள்ளது. 

பிரதமர் மோடி பலமுறை பிரச்சா ரம் மேற்கொண்டும் ஜார்கண்ட் மாநி லத்தில் பாஜக படுதோல்வி அடைந்துள்  ளது. வெற்று வாக்குறுதிகளால் கட்ட மைக்கப்பட்ட பாஜக மற்றும் மோடி யின் செல்வாக்கு கரைந்துகொண்டே வருகிறது என்பது இதன்மூலம் தெரி யவருகிறது. 

10 பெண் எம்எல்ஏக்கள் தேர்வு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் முறையாக 10 பெண் எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். அதிகபட்சமாக காங்கி ரஸ் கட்சியில் இருந்து 4 பெண் எம்எல்ஏக்களும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, பாஜக ஆகிய கட்சிகளில் தலா 3 பெண் எம்எல்ஏக்களும் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 10 பெண் எம்எல்ஏக்களில் 6 பேர் முதல் முறை யாக தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் ஆவர்.

நில உரிமையை பறித்த  பாஜக அரசு

ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடி யின மக்களின் நிலங்களை மற்ற வர்கள் வாங்க முடியாத வகையில் பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்திலி ருந்து இரண்டு சட்டங்கள் நடைமுறை யில் இருந்தன. இந்த இரண்டு சட்டங்க ளையும் 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ரகுபர் தாஸ் தலைமையிலான பாஜக அரசு அடாவடித்தனமாக ரத்து செய்தது. பழங்குடியின மக்களின் நிலங்களை மோடியின் நெருங்கிய நண்பரான அதானி நிறுவனத்திற்கு ஒதுக்கியது.இதற்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது கொடூ ரமாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. 

அப்போது வெடித்தெழுந்த ஜார் கண்ட் மாநில மக்களின் கோபம் 2019 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை ஆட்சிக்கட்டிலில் இருந்து துரத்தி யடித்துள்ளது. கடந்த நாடளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது சட்ட மன்றத் தேர்தலில் 22 சதவீத வாக்கு களை இழந்துள்ளது.