ரோடக்:
உலக யோகா தினத்தையொட்டி, பிரதமர் மோடி உள்பட அத்தனை அமைச்சர்களும், இருக்கும் வேலைகள் அனைத்தையும் விட்டுவிட்டு, வெள்ளிக்கிழமையன்று யோகா நிகழ்ச்சி நடத்தினர்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். ஹரியானா மாநிலம் ரோடக்கில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு யோகாசனங்களை செய்தார்.
இதில், அமித்ஷா நிகழ்ச்சிக்காக, சீனாவிலிருந்து தரை விரிப்புகள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், அவை அனைவரையும் கவரும் வகையிலும் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்தான், அமித்ஷா நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள், யோகா எப்போது முடியும் என்று காத்திருந்தவர்கள் போல, பயிற்சி முடிந்ததும் கூட்டத்திற்குள் பாய்ந்து, ஒருவருக்கொருவர் முண்டியடித்து, சீனத் தரை விரிப்புகளை வாரிச் சுருட்டிக் கொண்டு ஓடியுள்ளனர். தரைவிரிப்புகள் எதுவும் கிடைக்காதவர்கள், மற்றவர்களிடம் இருந்து தரைவிரிப்புகளைப் பறித்து அடிதடியிலும் இறங்கியுள்ளனர். இதனால் அமைதியாக யோகா நடைப்பெற்ற இடம் சிறிது நேரத்திலேயே போர்க்களமாக மாறியுள்ளது.