states

img

மகாபாரதம், தியானம், யோகாவும் கற்றுதரும் ம.பி. பாஜக அரசு.... ராமர் பாலத்தின் ‘தொழில்நுட்பம்’ பற்றி கல்லூரி மாணவர்களுக்கு பாடம்...

போபால்:
மத்தியப் பிரதேச மாநில,கலை அறிவியல் கல்லூரிகளில் “ராமரின் பொறியியல் தொழில்நுட்பங்கள்” என்ற தலைப்பிலான புதிய பாடத்தை, மத் திய பிரதேச பாஜக அரசு சேர்த்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநில பாஜக அரசானது, புதிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் பாடத்திட்டங்களை மாற்றியமைத்து உள்ளது. இதன்படி,முதலாமாண்டு கலை மற்றும்அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு, மகாபாரதம், ராமசரித் திரம், யோகா, தியானம் பற்றிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.இதில் “ராமசரித்மனாஸ் பிரயோகித்த தத்துவம்” எனும் பாடம், விருப்ப பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ராமசரித்மனாஸில், நான்கு வேதங்கள், புராணங்கள் மற்றும் மதம் தொடர்பான தலைப்புகளில் பாடங்கள்உள்ளன.முக்கியமாக, இல்லாத ராமர் பாலத்தை- எடுத்துக்காட் டாக கொண்டு, இலங்கைக்கு பாலம் கட்டிய “ராமரின் பொறியியல் நுட்பங்கள்” எனும் பாடப்பிரிவும் இடம்பெற்றுள்ளது. இதுபோக, கடவுள் ராமர் அவரது தந்தைக்கு கீழ் படிந்து நடந்தது, தீவிர பக்தியோடு செயல்பட்டதை குறிக்கும் பாடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இதுதற்போது சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது. 

மாணவர்களின் ஆராய்ச்சிமனப்பான்மையை மழுங்கடிக்கும் வகையிலும், அதனை பலநூற்றாண்டுகள் பின்னோக்கித் தள்ளும் வகையிலும், புராணங்களை அறிவியல் உண்மைகளாக கற்பிக்கும் விபரீதத்தில் பாஜக அரசு இறங்கியிருக்கிறது என்று குற்றச்சாட்டுக் கள் எழுந்துள்ளன.இதே மத்தியப் பிரதேசத்தில் 2011-ஆம் ஆண்டும் இதேபோல பள்ளி மாணவர்களுக்குபகவத் கீதை தொடர்பான பாடம் அறிமுகப்படுத்தப்பட்டு, கடும் எதிர்ப்பு கிளம்பியதால், பின்னாளில் திரும்பப் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக் கது.