tamilnadu

img

இலங்கையில் பலியான அப்பாவிகளுக்கு வாலிபர் சங்கம் அஞ்சலி

சேலம், ஏப்.28-இலங்கையில் தீவிரவாத தாக்குதலில் பலியான அப்பாவிகளுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சேலம் வடக்கு மாநகரக் குழு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இலங்கையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தீவிரவாத தாக்குதலில் எண்ணற்ற அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இக்கொடிய சம்பவத்தில் பலியானோருக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சேலம் வடக்கு மாநகர் குழு சார்பில் மாநகர வடக்கு குழு தலைவர் சதீஷ்குமார் தலைமையில் சேலம் புதிய பேருந்து நிலையம் முன்பு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பலியான பொது மக்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. வாலிபர் சங்கத்தின் மலைவாழ் இளைஞர் சங்க பொது செயலாளர் என். பிரவீன் குமார், மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ், மாநிலக் குழு உறுப்பினர் எம்.கற்பகம், மாநகர வடக்கு செயலாளர் ஆர்.வி.கதிர்வேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.