சேலம், அக்.5- சேலம் அருகே வாலிபர் வெட்டி படுகொலை செய்யப் பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் தாதகாப்பட்டி ஸ்ரீரங்க தெருவை சேர்ந்த வர் மோகன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தொழில் நிமித்தமாக வெள்ளியன்று திருச்செங் கோடு சென்றுள்ளார். ஆனால் இரவு வீடு திரும்பா ததால் உறவினர்கள் அவரை தேடியுள்ளனர். இதனி டையே சனியன்று காலை ஆட்டையாம்பட்டி அருகே பெத்தாம்பட்டி பகுதியில் உள்ள முட்புதரில் வெட்டுக் காயங்களுடன் மோகன் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறித்து சம்பவ இடத்திற்கு வந்த ஆட்டையாம்பட்டி காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோத னைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் உமா சங்கர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும் மோகன் தொழில் போட்டி காரணமாக படுகொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின் றனர். இச்சம்பவம் அப்பகுதியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.