சேலம், ஜூலை 30– சேலத்தில் விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த வனச்சரகர் மற்றும் வனவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் வனச்சரகப் பகுதியில் வனச்சரகராக பணியாற்றி வருபவர் அன்பழகன் (55). அப்பகுதிக்குட்பட்ட ராமநாயக்கன் பாளையத்தில் விவசாயிகள் சிலர் வனப்பகுதியையொட்டி பள்ளம் தோண்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து வனச் சரகர் அன்பழகன் மற்றும் வனவர் கோகுல் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விவசாயிகளை எச்ச ரித்துள்ளனர்.
இதன்பின் வனச்சரகர் பணம் கேட்ட தால் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள னர். அப்போது ஆத்திரமடைந்த வனச்சரகர் அன்ப ழகன், விவசாயி ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, சேலம் அஸ்தம்பட்டி அருகில் உள்ள மாவட்ட வன அலுவலகத்திற்குச் சென்று மாவட்ட வன அதிகாரி முருகனிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் செய்தனர். இப்புகார் குறித்து விசாரணை செய்த மாவட்ட வனஅலுவலர் முருகன், விசாரணை அறிக்கையை மண்டல வனப்பாது காவலர் பெரியசாமிக்கு அனுப்பி வைத்தார்.
இதை விசாரித்த மண்டல வன பாதுகாவலர் பெரியசாமி, ஆத்தூர் வனச்சரகர் அன்பழகன் மற்றும் வனவர் கோகுல் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு விசா ரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதில் வேறு வன அலுவலர்களுக்கு தொடர்பு இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீதும் துறைரீதியாக நடவ டிக்கை எடுக்கப்படும் எனவும் பாதுகாவலர் தெரி வித்தார். தற்போது ஆத்தூர் வனச்சரகர் அன்பழக னுக்கு பதிலாக சமூக பாதுகாப்புத் திட்ட அலுவ லர் துரைமுருகன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டி ருக்கிறார்.