tamilnadu

img

சேலம் உருக்காலை போராட்டம் மக்கள் போராட்டமாக மாறும் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. எச்சரிக்கை

சேலம் , செப்.11- சேலம் உருக்காலையை தனி யாருக்கு தாரைவார்க்கும் நடவ டிக்கையை உடனடியாக மத்திய கைவிடாவிட்டால் உருக்காலை தொழிலாளர்களின் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறும் என எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. தெரி வித்தார். மத்திய அரசின் கீழ் இயங்கும் சேலம் உருக்காலையானது சுமார் 4 ஆயிரம்  ஏக்கர் பரப்பளவில் அமைந் துள்ளது. இந்நிறுவனத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் பணிபுரிந்து வரு கின்றனர். இந்த நிலையில் சேலம் உருக்காலையை தனியாருக் தாரைவார்க்கும் வகையில் மத்திய அரசு சர்வதேச டெண்ருக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் உருக் காலை தொழிலாளர்கள் ஆலையின்  பிரதான நுழைவாயில் முன்பு கடந்த  ஆகஸ்ட் 5ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி  வருகின்றனர். இந்நிலையில் புதனன்று 38  ஆவது நாளாக காத்திருப்பு போராட் டத்தை தொடர்ந்தனர். இப்போராட் டத்தை சேலம் நாடாளுமன்ற உறுப் பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் வாழ்த்திப் பேசினார். அப்போது, மத் திய அரசு சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் முடிவினை கைவிட்டு, உலகளாவிய ஒப்பந் தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் அனைத்து அரசியல் கட்சிகளையும் இணைந்து மக்கள் போராட்டமாக சேலம் உருக்காலைக்கான போராட்டம் மாறும் என எச்ச ரித்தார். மேலும், திமுக மாவட்டச் செய லாளரும், வடக்கு சட்டமன்ற உறுப் பினருமான ராஜேந்திரன், சிஐடியு  மாநில துணைத்தலைவர் கே. விஜயன் ஆகியோர் போராட் டத்தை வாழ்த்திப் பேசினர். இப் போராட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் பி.பன்னீர்செல்வம் உள் ளிட்ட அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.