இளம்பிள்ளை, நவ. 23- சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம் இனாம் பைரோஜி, வேம் படிதாளம் ஆகிய ஊராட்சி, ஆட்டை யாம்பட்டி பேரூராட்சி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணியை வீரபாண்டி எம்எல்ஏ., மனோன்மணி துவக்கி வைத்தார். வேம்படிதாளத்தில் ரூ.10 லட் சத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி திறந்து வைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கு அரிசி வழங்கினார். இனாம் பைரோஜி ஊராட்சி புதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் இருந்து அரசம்பாளையம் வரை ரூ30 லட்சம் மதிப்பில் தார்ச் சாலை, ஆட்டையாம்பட்டி பேரூ ராட்சி 5ஆவது வார்டில் உள்ள தெருக்களில் ரூபாய் ஒரு கோடி மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டது. ஆட்டை யாம்பட்டி எம் என் எஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.30 லட்சம் மதிப்பில் இரு வகுப்பறைகள் கட்டும் பணியை வீரபாண்டி எம்எல்ஏ மனோன்மணி துவக்கிவைத்தார். மேலும் மாநில, மாவட்ட அள வில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாண விகளுக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கினார். நிகழ்ச்சியில் அரியா னூர் பழனிசாமி, வீரபாண்டி ஒன்றிய அட்மா குழு தலைவர் எஸ்.வரத ராஜ், பேரூர் செயலாளர்கள் சுப்ர மணியம்(ஆட்டையாம்பட்டி), துளசி ராசன்(இளம்பிள்ளை), வேம்படி தாளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பிடிஏ தலைவர் ரமேஷ், கூட்டு றவு சங்க தலைவர் சதாசிவம் மற்றும் ராஜ்மோகன்,மோகன்ராஜ்,சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.