சேலம் பள்ளப்பட்டி அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பேருந்தை சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு சிஐடியு போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் கொரோனா கால நிவாரண பொருட்களை வழங்கினர். இதில், சங்கத்தின் துணை பொதுச்செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.