சேலம், செப். 20- கொரோனா பாதிப்பின் காரண மாக உயிரிழந்த ஊழியரின் குடும்பத் தினருக்கு வாரிசு வேலை வழங்கக் கோரி சேலம் உருக்காலை ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத் தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். சேலம் உருக்காலை பணிமனை யில் வெப்ப உருட்டாலை பிரிவில் பணியாற்றி வந்தவர் சீனியர் டெக்னீசி யன் எம்.ஆர்.கண்ணன். இவருக்கு அண்மையில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
இதைய டுத்து சேலம் அரசு பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனி யன்று சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். இந்நிலையில் உயிரிழந்த எம்.ஆர்.கண்ணனின் குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி சனி யன்று சேலம் உருக்காலை தொழிற் சங்கங்களின் தலைமையில் ஊழியர் கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உயிரிழந்த ஊழியரின் குடும்பத்தினருக்கு வாரிசு வேலை வழங்குவது தொடர்பாக நிர்வாகம் எந்த உறுதியும் அளிக்கவில்லை. இதையடுத்து ஞாயிறன்று இரண் டாவது நாளாக அனைத்து தொழிலா ளர்களும் வேலை நிறுத்த போராட்டத் தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் சிஐடியு உருக்காலை தொழிற்சங்க பொதுச்செயலாளர் சுரேஷ்குமார், ஐஎன்டியுசி செயலாளர் தேவராஜன், எல்பி எப் செயலாளர் பெருமாள் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர் .
திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் வாழ்த்தி பேசினார். இதில் திரளான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், சேலம் உருக்காலை யில் ஒரு நாளைக்கு 1500 டன் ஸ்டீல் உற்பத்தி செய்யப்படுகிறது. இச்சூழ லில் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் ஸ்டீல் உற் பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளது. அதேநேரம், உயிரிழந்த ஊழிய ரின் குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசு வேலை வழங்கவிட்டால் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பி னர் அறிவித்துள்ளனர்.