இளம்பிள்ளை, ஜன. 14- மாநில அளவிலான மல்யுத்த போட்டியில் தங்கம் வென்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாண வர்கள் சாதனை படைத்துள்ளனர். சேலம் மாவட்டம், ஆட்டையாம் பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள் ளியில் பயிலும் 9-ம் வகுப்பு மாண வன் கௌரிசங்கர் மற்றும் +1 பயி லும் மாணவன் கணேசன் ஆகிய இரு வரும் கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான மல்யுத்தம் கற்று வரு கின்றனர். மேலும் கடந்த இரண்டு ஆண்டுக ளாக மாவட்ட, மாநில அளவில் நடக்கும் மல்யுத்த போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங் களுக்குள் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்நிலை யில், கடந்த ஜன.6 மற்றும் 7 ஆகிய இரண்டு நாட்கள் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம்., கல்லுாரியில் தமிழ் நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார் பில் மாநில அளவிலான மல்யுத்த போட்டி நடைபெற்றது. இதில் ஆட்டையாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாண வர்கள் கௌரிசங்கர் மற்றும் கணே சன் இருவரும் கலந்து கொண்டு 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலி டம் பிடித்து தங்கப்பதக்கம் வென்ற னர். இதைத்தொடர்ந்து, அடுத்த மாதம் பீகார் தலைநகர் பட்னாவில் நடக்க வுள்ள தேசிய அளவிலான மல்யுத்த போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாநில விளை யாட்டு மேம்பாட்டு ஆணையம் சார் பில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதில் கௌரிசங்கர் கடந்தாண்டு நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்து தேசிய போட்டியில் கலந்து கொண்டு சான்றி தழ் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் விஜயராகவன், உதவி தலைமையாசிரியர் நந்தீஸ் வரன், உடற்கல்வி இயக்குனர் முருகே சன், ஆசிரியர்கள் மணிகண்டன், முத்து குமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுகுமார் ஆகியோர் பராட்டு தெரிவித்துள்ளனர்.