இளம்பிள்ளை, ஜூன் 3- மத்திய, மாநில அரசுகளின் உத்தரவை மீறி தனியார் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று கடன் மற்றும் வட்டி தொகையை உடனடியாக செலுத்துமாறு அடாவடித்தனம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக இளம்பிள்ளை அருகே கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த மூன்று சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் தனி தனியாக புகார் அளித்துள்ளனர். அந்த புகார் மனுவில் கூறி யிருப்பதாவது, இளம்பிள்ளையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடன் பெற் றுள்ளோம்.
இதுவரை நிலுவை இல்லாமல் கடனை திருப்பி செலுத்தி வந்த நிலையில், கடந்த 2 மாதத்திற்கு மேலாக கொரோனா தொற்று ஊரடங்கால் வேலை இல்லாமல் தவித்து வருகிறோம். இந்நிலையில், செவ்வாயன்று தனி யார் நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டிற்கு வந்து மகளிர் சுய உதவிக்குழு பெண்களை அழைத்து நிலுவையிலுள்ள கடன் தவணையை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும், அதற்குரிய அபராத தொகையும், வட்டியும் கட்ட வேண் டும் என்று கட்டாயப்படுத்தி வருகின்றன. மேலும், விசைத்தறி கூலித் தொழிலாளர்களான நாங்கள் இரண்டு மாதத்திற்கு மேல் வேலை இல்லாமல் உண விற்கே தள்ளாடி கொண்டு வருகிறோம்.
ஆகையால், நாங் கள் பெற்றுள்ள கடனுக்கு ஒரு வருடம் அவகாசம் அளித்தும், அதற்கான வட்டியை தள்ளுபடி செய்யுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பெண்கள் பெற் றுள்ள கடனை அடாவடித்தனமாக வசூல் செய்யும் வங்கி கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இப்புகார் மனு மீது காவல்துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.