tamilnadu

img

பழங்கால வரலாற்றின் தந்தை ராபர்ட் புரூஸ் பூட்டின் 107 ஆவது நினைவு தினம் அனுசரிப்பு

ஏற்காடு, டிச. 29- பழங்கால வரலாற்றின் தந்தை ராபர்ட் புரூஸ் பூட்டின் 107 ஆவது  நினைவு தினத்தையொட்டி ஞாயி றன்று ஏற்காட்டில் உள்ள அவரது கல்லறையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.  ராபர்ட் புரூஸ் ஃபூட்  செப்டம்பர்  23, 1834ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள சில்டன்ஹாம் என்ற ஊரில்  பிறந்தார். தனது 24ம் வயதில் சென்னையில் இந்திய புவியியல்  அளவைத் துறையில் நிலவியலாள ராக பணியில் சேர்ந்தார். இவர் 1863ம் ஆண்டு மே 30 அன்று சென்னைக்கு அருகில் பல்லாவரம் பகுதியில் உள்ள திரிசூலம் மலைப் பகுதியில் கல் கோடாரி ஒன்றை கண்டுபிடித்தார்.  அதன் பின்னர் செப்டம்பர் 28, 1863ம் ஆண்டு ஆத்திரபாக்கம், கொற்றலை ஆற்றுப் படுகையில் முதுமக்கள் தாழி, பானைகள், கற்கால வெட்டுக் கருவிகளை கண்டுபிடித்தார். இக்கருவிகள் சுமார் 5 லட்சம் முதல் 15 லட்சம்  ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக் கருவிகளை ஹோமோ எரக்டஸ் என்னும் மனித இனம் பயன் படுத்தியதாக தெரிய வருகிறது. இவரின் இந்த அரிய கண்டுபிடிப்பு பழங்கால மனித இனத்தின் வாழ்க்கை இந்திய துணைக் கண்டத்திலும் இருந்துள்ளது என தெரிய வந்துள்ளது. ராபர்ட் புரூஸ் ஃபூட் 1884ம் ஆண்டு ஆந்திரா மாநிலத்தில்  3.5 கி.மீட்டர் நீளமுள்ள பெலும் குகையைக் கண்டுபிடித்தார். இது இந்தியாவில் உள்ள இரண்டாவது நீளமான குகையாகும். இவர் 42  ஆண்டுகள் வரலாற்றுக்கு முற் பட்ட இந்தியா பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். இவரின் ஆய்வுகள் மனிதனின் வரலாற்றை அறிந்துக் கொள்ள உதவுகிறது. இவர் கண்டு பிடித்த கற்கருவிகள் மற்றும்  கண்டுபிடிப்புகளை 1904ம் ஆண்டில் சென்னை அருங்காட்சி யகம் காட்சிப்படுத்தியுள்ளது. இவர் கற்கருவிகள் கண்டுபிடித்து 149 ஆண்டுகள் முடிந்து 150வது ஆண்டு  தொடங்கியுள்ளது.  ராபர்ட் புருஸ்ஃபூட் சேலம் மாவட்டம் ஏற்காடு பேருந்து நிலையம் அருகே உள்ள ஐவி காட்டேஜ் என்னும் வீட்டில் வாழ்ந் தார். இவர் டிசம்பர் 29, 1912ம் ஆண்டு கொல்கத்தாவில் கால மானார். இவரின் கல்லறை ஏற் காட்டில் ஹோலி டிரினட்டி சர்ச்சில் உள்ளது. இதனருகே இவரது மனைவி, மாமனார், குழந்தை கல்லறைகளும் உள்ளன.   இவரது 107ஆவது நினைவு தினத்தை அவரது கல்லறையில் ஞாயிறன்று அனுசரிக்கப்பட்டது. இதில் அறிவியல் எழுத்தாளர் ஏற் காடு இளங்கோ, பெனட் வால்ட்டர்,  ஓவியர் ராஜ்கார்த்திக், ஓவியர் மனோ, ஜார்ஜ் டிமிட்ரோவ், தில்லைக்கரசி உள்ளிட்டோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத் தினர்.