சேலம், செப்.5- முறைசாரா தொழிலாளர்க ளுக்கு வழங்க வேண்டிய நலவாரிய பணப்பலன்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி வியாழனன்று சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் சேலம் கோட்டை மைதானம் முதல் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தின் விளைவாக தமி ழகத்தில் 17 முறைசாரா தொழிலா ளர் நல வாரியங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த முறைசாரா தொழி லாளர் நல வாரியங்களுக்கு தமிழக அரசு நலவாரிய தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய மறுத்து வருகி றது. இதனால் கட்டுமானம், அமைப் புசாரா ஓட்டுனர், விசைத்தறி, கைத் தறி, ஆட்டோ, சுமைப்பணி, சாலை யோர வியாபாரிகள், தையல், ஓவி யம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட் டுள்ள முறைசாரா தொழிலாளர்க ளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட் டுள்ளது. இந்த நலவாரியங்களை சிறப்பாக செயல்படுத்த பட்ஜெட் டில் போதிய நிதியை ஒதுக்கிட வேண்டும். தொழிலாளர் நலவாரிய அலுவ லகங்களில் நடைபெறும் முறை கேடுகளை களைந்து முறைசாரா தொழிலாளர்களுக்கு வழங்க வேண் டிய ஓய்வூதியம், இயற்கை மற்றும் விபத்து மரணம், திருமணம் உள் ளிட்ட அனைத்து பணப் பலன்களை யும் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக பாதுகாப்புத் திட்டத்தை முறைப்படுத்தி குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்த்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி வியாழனன்று சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் சேலம் கோட்டை மைதானம் முதல் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் வரை பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்பேரணி மற்றும் ஆர்ப்பாட் டத்திற்கு சிஐடியு மாவட்ட தலை வர் பி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு, மாநில செயலா ளர் கே.சி.கோபிகுமார், மாவட்டச் செயலாளர் டி.உதயகுமார், மாநி லக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே. தியாகராஜன், ஆர்.வெங்டபதி உள்ளிட்டோர் கண்டன உரையாற் றினர். இதில் சிஐடியு கட்டுமான சங்க தலைவர் சி.கருப்பண்ணன், செயலாளர் சி.மயில்வேலன், பொரு ளாளர் சி.மோகன் மற்றும் முறை சாரா தொழிலாளர்கள் திரளா னோர் கலந்து கொண்டனர்.