சேலம், நவ.6- டிஆர்இயு சங்க தலைவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத் தவர்களை கைது செய்ய வலியு றுத்தி சேலத்தில் ரயில்வே தொழிலா ளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். திருச்சி ரயில்வே சொசைட்டி யில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு முன் டிவிடன்ட் (ஈவுத்தொகை) வழங்கப்படும். ஆனால் இந்த வரு டத்திற்கான டிவிடன்ட் இன்னும் வழங்கப்படவில்லை. இதுதொடர் பாக தட்சிண ரயில்வே எம்பி ளாய்ஸ் யுனியன் (டிஆர்இயு) கிளை செயலாளரான குமரேசன் தனது முகநூலில் டிவிடன்டை உடனடி யாக வங்கி கணக்கில் வழங்கக் கோரி பதிவிட்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த எஸ்ஆர்எம்யூ சங்க நிர்வாகிகள் சிலர் கடந்த 4.11.2019 அன்று அலுவலகத்தில் இருந்த குமரேசனை தாக்கி கொலை மிரட் டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள், காவல் துறையில் புகார் அளிக்கப்பட் டுள்ளது. இந்நிலையில் ரயில்வே தொழி லாளர்களின் நியாயமான கோரிக் கையை வலியுறுத்தி டிஆர்இயு சங்க செயலாளரை தாக்கிய எஸ்ஆர் எம்யூ நிர்வாகிகளைக் கண்டித்தும், ரயில்வே அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வலியு றுத்தியும் சேலத்திலுள்ள நிரந்தர இருப்புப்பாதை அலுவலகம் (வடக்கு) முன்பு புதனன்று டிஆர்இயு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட செயலாளர் எஸ்.திருப் பதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் டி.உதயகுமார், டிஆர் இயு கோட்ட செயலாளர் கே. அல்லிமுத்து, துணைச் செயலாளர் எஸ்.சாம்பசிவன் ஆகியோர் கண் டன உரையாற்றினர். இதில் சிஐடியு நிர்வாகிகள் சி.மயில் வேலன், பி.சந்திரன், பாலகிருஷ் ணன், எ.சுந்தரம் மற்றும் டிஆர்இயு டிவிஷன் நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர் கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.