tamilnadu

img

மேம்பாலம் திறந்தும் பயனில்லை மாவட்ட ஆட்சியரிடம் சிபிஎம் முறையீடு

சேலம், ஜூன் 20- சேலம் மாநகரில் புதிய மேம்பா லத்தை தமிழக முதல்வர் திறந்த போதிலும், போக்குவரத்து குறைந்த பாடியில்லை என மார்க்சிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேதுமாதவன், வடக்கு மாநகர செயலாளர் என். பிரவீன்குமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது, சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலை போக்கிட மேம்பாலம் அமைக்கப்பட்டு கடந்த ஜூன் 11 ஆம் தேதியன்று தமிழக முதல்வர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.  இருப்பினும் நால்ரோடு பேருந்து நிறுத்தத்திலிருந்து டிவிஎஸ் பேருந்து நிறுத்தம் வரை முறையாக சாலை வசதி இல்லாத காரணத்தால் மேம்பாலத்தின் வலது புறமாக உள்ள சர்வீஸ் சாலை வழியாக அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன.

இதனால் டிபிஎஸ் பேருந்து நிறுத்தம் நால்ரோடு பகு திகளில் மிகுந்த போக்குவரத்து நெரி சல்  ஏற்பட்டடு வருவததோடு, சாலை விபத்துகளும் நடக்க வாய்ப்புள்ளது. மேலும் மேம்பாலம் திறப்பிற்கு பிற கும் மக்கள் பெரிதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்படுவது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல. ஆகவே, மேம்பாலம் அமைத்த தின் நோக்கம் முழுமையாக நிறை வேற வேண்டுமாயின், மக்கள் நலன் கருதி நால்ரோடு முதல் டிவிஎஸ் பேருந்து நிறுத்தம் வரையில் மேம் பாலத்தின் இடதுபுறத்தில் சர்வீஸ் சாலையை அமைத்திட விரைந்து நட வடிக்கை எடுத்து, பேக்குவரத்து நெரி சலை தீர்க்க வேண்டுமென அம்மனு வில் கூறப்பட்டுள்ளது.