சேலம்,மே 30- கொரோனா நோய்த் தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கால் தெருக்கூத்து மற்றும் நாடகக் கலைஞா்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி உள்ள நிலையில் தமிழக அரசு உரிய நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடகம் நடித்து கோரிக்கை வைத்துள்ளனர். சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த நாடகம் மற்றும் தெருக்கூத்து கலை ஞா்கள் நாள்தோறும் கிராமங்க ளில் தெருக்கூத்து மற்றும் நாடகம் நடத்தி, அதில் கிடைக்கும் வருவா யைக் கொண்டு வாழ்வை நகர்த்தி வந்தனா். எடப்பாடி, சங்ககிரி, சீரகா பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில் 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இவா்கள் அனைவரும் பாரம்பரியமாக நாடகம் மற்றும் தெருக்கூத்து கலைஞா்களாக இருந்து வருகின்ற னா்.
இக்கலைஞா்கள் கோயில் விழாக் காலங்களில் கா்ண மோட் சம், குறவஞ்சி, அரிச்சந்திரா, நல்ல தங்காள், உள்ளிட்ட பல்வேறு கதைகளுக்கான தலைப்புகளைத் தோ்வு செய்து, நாடகங்களை நேரடி யாக தத்ரூபமாக மக்களிடம் நடித்துக் காட்டுவது வழக்கம். நாடகக் கலைஞா்களின் பங்கு இல் லாமல் திருவிழாக்கள் இல்லை என்றே கூறலாம். இந்நிலையில் தற்போது, கொரோனா நோய்த் தொற்று நடவடிக்கையால் ஊரடங்கு அம லில் உள்ளதால் தெருக்கூத்துக்கு செல்ல முடியாமல் கலைஞர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி யுள்ளனர். மேலும் ஏற்கெனவே கூத்து நடத்துவதற்காக வாங்கிய முன்பணத்தையும் திருப்பி அளித்து வருவதால், வருவாய்க்கு வழியின்றி வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின் றனர். ஆகவே, தெருக்கூத்து மற்றும் நாடகக் கலைஞா்களுக்கு வாழ்வா தாரம் காக்கும் வகையில் நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என விழிப்புணர்வு நாட கத்தை நடத்தி கோரிக்கை விடுத் துள்ளனர்.