சேலம், ஜூலை 24- தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக அணிதிரள்வோம் என சேலத்தில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் விழாவில் ரசிகர்கள் உறுதிமொழி ஏற்றனர். நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் விழா சேலம் மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் சேலம் குகை பகுதியில் கேக் வெட்டி, மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. அப்போது ஏழை எளிய மாணவர்களின் நலனை பாதிக்கும் மத்திய பாஜக மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நடிகர் சூர்யாவிற்கு ரசிகர்கள் அனை வரும் உறுதுணையாக இருப்போம் எனவும், தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக அணிதிரள்வோம் என ரசிகர்கள் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட செயலாளர் லோகநாதன் உள்ளிட்ட சூர்யா நற் பணி இயக்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.