சேலம்,ஜனவரி.24- எடப்பாடியில் இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவத்தில் அப்பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை, 7 மாதங்களுக்கு பிறகு கணவரின் வீடு புகுந்து கடத்திச் சென்ற விவகாரத்தில் அப்பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இளம்பெண் கடத்தப்பட்ட வீடியோ வெளியான நிலையில் அப்பெண்ணை மீட்ட போலீசார் 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.