சேலம், மார்ச் 15- நோய் பரவாமல் இருக்க ட்ரம்ப் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ள அனைவரும் தமிழர்களின் பாரம்பரியப்படி வணக்கம் தெரிவித்து வருவது தமி ழர்களுக்கு கிடைத்த பெருமை என சென்னை உயர்நீ திமன்ற நீதிபதி வள்ளிநாயகம் பெருமிதம் தெரிவித் துள்ளார். உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ் சார்பில் சேலத்தில் உலக நுகர் வோர் தினவிழா நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற லோக் அதாலத் நீதிபதி வள்ளிநாய கம், சேலம் மாவட்ட உணவு வழங்கல் மற்றும் நுகர் வோர் பாதுகாப்பு அலுவலர் தியாகராஜன், சேலம் மாநகர காவல் உதவி ஆணையாளர் ஆனந்தகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். விழாவில் நுகர்வோர்களுக் கான உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு குறித்து பேசிய நீதியரசர் வள்ளிநாயகம் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காய்ச்சலால் மக்கள் பெரும் பீதி அடைந்துள்ள நிலையில் நோய் பரவாமல் இருக்க ட்ரம்ப் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ள அனைவரும் தமிழரின் பாரம்பரியப்படி வணக்கம் தெரிவித்து வருவது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை என பெருமிதத்துடன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அரசு அலுவலர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.