இளம்பிள்ளை, டிச. 25- சேலம் மாவட்டத்தில் மாணவிகளுக்கு தற் காப்பு கலையான கை சிலம் பப் பயிற்சி மற்றும் தற்காப் புக் கலை குறித்து எழுத்துத் தேர்வு செவ்வாயன்று நடை பெற்றது. தமிழக பள்ளி கல்வித் துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல் நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு கலையான கை சிலம்பம் குறித்து அடிப்படைப் பயிற்சி அளித்து 50 மதிப் பெண்களுக்கு எழுத்துத்தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டது. இதன்படி ஆட்டை யாம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள் ளியில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் 587 மாணவிகளுக்கு சிலம் பம், தற்காப்பு கலை குறித்து கல்வித்துறை சார்பில் வழங்கிய வீடியோ தொகுப்பு காட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து கை சிலம்பப் பயிற்சி அளிக்கப்பட்டது.மேலும் இக்காலத்தில் மாணவியர்களுக்கு தற்காப்புக் கலையின் அவசியம் குறித்து தலைமை ஆசிரியர் யோகேஸ்வரி உரை யாற்றினார். நிறைவாக தற்காப்பு கலை குறித்து 50 கேள்விகள் அடங்கிய எழுத்துத்தேர்வினை மாணவிகள் எழுதினர். இதற்கான ஏற்பாடு களை உடற்கல்வி இயக்குனர் ரதி மற்றும் உடற்கல்வி ஆசிரியை மணிமேகலை உள் ளிட்ட ஆசிரியர்கள் ஏற்பாடு செய்தி ருந்தனர். இப்பயிற்சி குறித்து பெற்றோர் கள் கூறுகையில், பெண் குழந்தைகள் மீது நடைபெறும் குற்ற சம்பவங்களை எதிர்கொள்ளும் வகையில் இப்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும் என்று தெரி வித்தனர்.