tamilnadu

img

விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் விவசாயிகள் எதிர்ப்பு

சேலம், பிப். 23- விளை நிலங்கள் வழியே எரிவாயு குழாய் பதிக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக கொங்கணாபுரத்தில் பாதிக்கப் பட்ட விவசாயிகளின் ஆலோச னைக் குழு கூட்டம் சனியன்று நடைபெற்றது. கோவை, இருகூர் முதல் பெங்களூரூ, தேவனகுந்தி வரை ஐடிபிஎல் கச்சா எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை அறிவித்து, விவசாயிகளுக்கு நிலம் ஆர்ஜிதம்  செய்ய போவதாகவும், ஆட்சே பணை இருந்தால் தெரிவித்திட நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் இந்த திட்டம் சம்பந்த மாக விவசாயிகள் சார்பில் 11  வகையான விளக்கம் கேட்கப்பட் டது. அதற்கு ஐடிபிஎல் நிர்வாகம் இதுவரை உரிய பதில் அளிக்க வில்லை.  தற்போது கருத்து கேட்பு  விசாரணை என தற்போது நோட் டீஸ் அனுப்பி வருகின்றனர்.  ஐ டி பி எல் நிர்வாகத்தினர் விவசாயிகளுக்கு உரிய விளக்கம் தராததால், கருத்து கேட்பு விசா ரணையை ஆட்சேபித்து அண்மை யில் சங்ககிரி வருவாய் கோட்டாட் சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். அப்போது ஐடிபிஎல் திட்டத்தை விளைநிலம் வழியாக கொண்டு செல்லாமல் நெடுஞ்சாலை வழியே கொண்டு செல்ல வலியுறுத்தப்பட்டது. இக் கோரிக்கையை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் தமிழக முதல்வர், மின்துறை அமைச்சர் ஆகியோரிடம் மனு அளிக்கப் பட்டது.  இந்நிலையில் 2ஆவது முறை யாக கருத்து கேட்பு பெயரில் தனித்தனியாக அழைத்து மிரட் டல் விடுத்து வருகிறது ஐ டி பி  எல் நிர்வாகம். இதற்கு வருவாய்த் துறையும், காவல் துறையும் உடந்தையாக செயல்பட்டு வருகி றது. நெடுஞ்சாலை வழியே பைப் லைனைக் கொண்டு செல்ல, நெடுஞ்சாலைத்துறை மாதாந்திர வாடகை கேட்பதால், விவசாயி கள் விளைநிலத்தில் கொண்டு செல்லும் கொலை பாதக செயலில் ஈடுபட்டு உள்ளது மத்திய அரசின் ஐடிபிஎல். மேலும், விளை நிலத்தை கையகப்படுத்திக் கொடுத்துவிட்டு, ஐடிபிஎல்லையே தனியாருக்கு தாரைவார்த்திடும் சதித்திட்டமும் இதிலே பதுங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.  இந்நிலையில்தான் பாதிக்கப் பட்ட விவசாயிகளின் ஆலோச னைக் கூட்டம் சனியன்று கொங் கனாபுரம் ராயணம்பட்டியில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் வருகின்ற பிப்.25ல் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கருத்து கேட்பு கூட்டதில் கலந்துக் கொண்டு ஐடிபிஎல் திட்டத்தை நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்ல வேண்டும் என்று கோரி விவசாயிகள் மனு கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.  இந்த ஆலோசனை கூட்டத் தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேலம் மாவட்டச் செயலா ளர் ஏ.ராமமூர்த்தி, கொங்கனா புரம் ஒன்றியச் செயலாளர் வெங்கடேஷ் மற்றும் ஏழுமலை உள்ளிட்ட பாதிக்கப்பட்ட விவ சாயிகள் கலந்து கொண்டனர்.