tamilnadu

img

போலி சிவப்பு பாதரசம்: மோசடி கும்பல் கைது

சேலம், ஜன. 9- சேலத்தில் சிவப்பு பாதரசம் இருப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர்களை போலீ சார் கைது செய்தனர்.  அரிய நோய்களுக்கு மருந்து தயாரிக் கவும், அபாயகரமான ஆயுதங்கள் தயா ரிக்கவும் சிவப்பு பாதரசம் பயன்படுத்தப் படுவதாகவும், இதனை கள்ளச்சந்தையில் விற்றால் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் கிடைக்கும் எனக் கூறி அதனை இருவர் விற்க முயன்றுள்ளனர். இதுகுறித்து  பெங் களூரு அத்திப்பள்ளி பகுதியைச் சேர்ந்த  சதீஷ்குமார் என்பவர் சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் சேலம் மாநகர காவல் ஆணை யர் செந்தில்குமார் ஆலோசனையில், துணை ஆணையர்கள் தங்கதுரை மற்றும்  செந்தில் ஆகியோர் தலைமையில்  தனிப் படை அமைக்கப்பட்டு  காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.  இதைத்தொடர்ந்து, சூரமங்கலம் பகுதி யில் உள்ள தனியார் காபி பாரில் இரு தரப்பி னரும் சந்திப்பதாகத் தகவல் கிடைத்தது. காபி பாருக்கு சென்ற போது தனிப்படை காவல்துறையினர் அவர்களைச் சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய் யப்பட்ட 5 பேரும் தமிழகத்தின் வெவ்வேறு  மாவட்டங்களைச் சேர்ந்த பாண்டியராஜன், ரமேஷ், கண்ணதாசன், தங்கபாண்டியன், புருஷோத்தமன் என தெரியவந்தது.  மேலும் சிவப்பு பாதரசத்தை கொண்டு அணு ஆயுதங்கள் தயாரிக்க முடியும் என வும், அறிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்து தயாரிக்க முடியும் எனவும், ரூ.3 கோடிக்கு விற்பனை செய்யலாம் என தெரிவித்து விற்க முயன்றதும் தெரியவந் தது. இதையடுத்து இந்த மோசடி கும்பல் இதுவரை எவ்வளவு பேரை ஏமாற்றி உள்ள னர் என காவல்துறையினர் தொடர்ந்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின் றனர்.