இளம்பிள்ளை, ஜூலை 2- இளம்பிள்ளை அருகே ஏகாபுரம் ஊராட் சியில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், அக்கிராம மக் கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள ஏகாபுரம் ஊராட்சிக்குட் பட்ட களியகவுண்டனூர் பகுதியில் வசிக் கும் கணவன், மனைவி இருவரும் சமீபத் தில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு குழந்தை களுடன் சென்று விற்று வீடு திரும்பியுள் ளார். இதையடுத்து அவர்களுக்கு மகுடஞ் சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர்கள் வசித்து வந்த களியகவுண்டனூர் பகுதியில் செவ்வாயன்று 29 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. இதில், அவர்க ளது இரண்டு குழந்தைகள் மற்றும் அவர் வீட்டின் அருகில் இருந்தவர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ஜூலை 2 ஆம் தேதி வியாழனன்று 100க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது டன், அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டது. மேலும் நோய் எதிர்பாற் றால் மாத்திரைகள், கபசுர குடிநீர் உள்ளிட்ட வைகள் வழங்கப்பட்டு மகுடஞ்சாவடி வட் டார மருத்துவர்கள், சுகாதார துறையினர், செவிலியர்கள் முகாமிட்டு பரிசோதனை செய்து வருகின்றனர். இதனால் அக்கிராம மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகி உள்ள னர்.