சேலம்,செப்.12- சேலம் சோனா கல்லூரியில் 2019 -20 ஆண்டிற்கான எம்இ, எம்பிஏ முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா புதனன்று நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் முன்னிலையில் நடை பெற்ற இவ்விழாவிற்கு கல்லூரியின் தலைவர் வள்ளியப்பா தலைமை வகித்தார். மேலாண்மைத் துறை இயக்குனர் ஸ்வருப் மோகந்தி வரவேற்புரையாற்றினார். இதில் மும்பை ஜேஎஸ்டபிள்யூ பிசினஸ் திறமைகள் கையகப்படுத்துதல் குறித்து தலைவர் விவேக் திரிவேதி சிறப்புரை யாற்றினார். பின்னர் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற வசதிகளை பயன்படுத்திக் கொள்வது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.