சேலம், ஜூலை 11 - கொரோனா காலத்திலும் மக்களை வஞ் சிக்கும் வகையில் செயல்படும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சேலத்தில் மக்கள் சந் திப்பு இயக்கம் நடைபெற்றது.
கொரோனா ஊரடங்கால் வேலையி ழந்து மக்கள் வறுமையில் வாடி வரும் நிலை யில், மத்திய அரசு வரலாறு காணாத வகை யில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தி வருகிறது.
இதேபோல், மின் கட்டணம் என்ற பெயரில் மாநில அரசு கொள்ளைய டித்து வருகிறது. மத்திய, மாநில அரசுக ளின் இந்நடவடிக்கைகளை கண்டித்தும், கொரோனா நிவாரண நிதியாக மக்களுக்கு ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மேற்கு மாநகரக் குழு சார்பில் மக்கள் சந் திப்பு இயக்கம் நடைபெற்றது.
சேலம் அரியாக்கவுண்டம்பட்டி பகுதி காளியம்மன் நகர், லட்சுமி நகர் பகுதிகளில் நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பு இயக் கத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் பி.பால கிருஷ்ணன், கமிட்டி உறுப்பினர் வி.பிர காஷ், கிளைச் செயலாளர்கள் வி.முருகன், எம்.மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.