சேலம், செப். 21- சேலத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தை வாலிபர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர். சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலத் திற்கு உட்பட்ட 37,39ஆவது வார்டில் உள்ள பாரதி நகர் மற்றும் மாருதி நகர் பகுதியில் கடந்த பல மாதங்களாக குப்பைகள் அள்ளப்படாமல் ஆங்காங்கே தேங்கி கிடக் கின்றன. இதேபோல், சாக்கடை கழிவுநீர் சாலைகளில் தேங்குவதால் அப்பகுதியினருக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிழக்கு மாநகர தலை வர் பிரபாகரன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண் டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் சில நாட்களில் அடிப்படை வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.