சேலம் மாவட்டத்தை சுற்றி யுள்ள பாலமலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலை, ஜருகு மலை உள்ளிட்டவைகள் மலை கள் சூழ்ந்த பகுதியாக உள்ளது. இப்பகுதிகளில் அதிக அளவில் அரசால் மூங்கில் பயிர் செய்யப் பட்டுள்ளது. இந்த மூங்கிலை நம்பி மலைகுறவர் பழங்குடி மக்கள் மூங்கிலால் ஆன சிறுபொருட்களை தயாரித்து தங்களின் வாழ்வாதார தேவை களை பூர்த்தி செய்துவந்தனர்.
குறிப்பாக, தம்பம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், புத்திரகவுண்டம்பாளையம், துளுக்கனூர், அம்மம்பாளையம், தெடாவூர், அம்மாபேட்டை, வெள்ளாள குண்டம், வலசையூர், தும்பல் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மலைக்குறவர் மக்கள் மலைகளுக்கு சென்று மூங்கிலை வெட்டி எடுத்துவந்து மூங்கில் கூடை மற்றும் மூங்கிலால் ஆன பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். ஆரம்ப காலங்களில் மூங்கில் கள் மலைப்பகுதியில் இருந்து வெட்டி எடுத்துவரப்பட்டது. ஆனால், கடந்த பதினைந்து ஆண்டுகளாக மூங்கிலை வெட்ட அரசு தடை செய்துள்ளது. இதனால் வேலை இழந்த தொழி லாளர்கள் தங்கள் வசிக்கும் பகுதி யில் கூலி மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களாகவும், வெளி மாநிலங்களுக்கு சென்று கழுதை பால் விற்பனை செய்தும், பிளாஸ்டிக் கூடைகளை கொள் முதல் செய்தும் அதனை விற் பனை செய்து வருகின்றனர். தற் சமயம் சில குடும்பங்களைச் சேர்ந்தோர் மட்டும் தொடர்ந்து மூங்கில் தொழிலை செய்து வரு கின்றனர். அதுவும் தனியாரி டம் அதிக விலைக்கு மூங்கில் களை வாங்கி பொருட்களை செய்வதால் போதிய லாபம் இன்றி நஷ்டப்பட்டு வருகின் றனர். இந்தச் சூழ்நிலையில் தொழிலை நம்பி இருந்த பல குடும்பங்கள் வாழ வழி இன்றியும், உணவு இன்றியும் தவித்து வருகின்றனர். மூங்கில் பயிரை பயன்படுத்தி தொழில் செய்யும் பழங்குடி மலைக்குறவர் இன மக்கள் முன் னேற மத்திய, மாநில அரசுகள் வன உரிமை சட்டத்தை முறை யாக அமல்படுத்த வேண்டும். மேலும், சுற்றுச்சூழலை பாது காக்க தற்போது பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையும் உள்ளது.
இந்த காலக்கட்டத் தில் மூங்கில் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி னால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.ஆகவே, இவர்களுக்கு மூலப்பொருளாக உள்ள மூங்கிலை வனப்பகுதி யில் வெட்ட அரசு அனுமதி அளிக்க வேண்டும். மூங் கிலால் செய்யப்படும் மேசை, நாற்காலி,கட்டில் இவை களின் விற்பனைக்கு அரசு புதியவிழிப்புணர்வு ஏற்படுத்தி இந்த தொழிலுக்கு அரசு மானியம் மற்றும் வங்கி கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வன உரிமைச் சட்டத்தை முறையாக அமல் படுத்த வேண்டும். மூங்கில் பயன் பாட்டை அனைத்து பயன்பாட்டி லும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அத் தொழிலை நம்பியுள்ளோர் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும், தற்போது அரசின் ஊரடங்கு உத்தரவின் காரண மாக வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நிலையில் பழங் குடியின நலவாரியத்தில் கூடை பின்னும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும். விண்ணப்பித்த அனைவருக்கும் நிவாரண பொருட்களை வழங்க அரசு வழி வகை செய்ய வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைக்கின்ற னர்.
- எழில்