சேலம், ஜுலை 22 - சேலத்தில் அரசுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரிக்கும் முயற்சி மார்க்சிஸ்ட் கட்சி யின் தலையீட்டால் தடுத்து நிறுத் தப்பட்டது. சேலம் மாநகராட்சி 21 ஆவது டிவிசனுக்கு உட்பட்ட அரியாக்கவுண் டம்பட்டி பகுதியில் 1988 ஆம் ஆண்டு 63 வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டது. இதில் 20 ஆயிரத்து 604 சதுர அடிகள் கொண்ட சிறுவர் பூங்கா, விளை யாட்டு மைதானம் ஒதுக்கீடு செய்யப் பட்டது. பூங்கா மற்றும் விளை யாட்டுத் திடலுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 20 ஆயிரத்து 604 சதுரடி கள் கொண்ட நிலத்தினை தனிநபர் ஒருவர் போலியாக பத்திரம் தயாரித்து வேலி அமைத்து அபகரிக்க முயற்சி செய்துள்ளார். இதையடுத்து ரூ.3 கோடி மதிப் புள்ள அரசுக்குச் சொந்தமான மாநக ராட்சிப் பூங்கா நிலத்தை மீட்டு சிறுவர் பூங்கா, விளையாட்டு மைதானம் அமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்ட அறிவிப்பு விடப்பட்டது. மேலும் பொதுமக்களிடம் கையெழுத்து இயக் கம் நடத்தி மாவட்ட ஆட்சியர், மேற்கு சட்டமன்ற உறுப்பினர் ஜி.வெங்க டாசலம் மற்றும் மாநகராட்சி ஆணை யாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது. இந்நிலையில், காவல் துறை யினரின் துணையோடு அவ்விடத்தில் மீண்டும் முள்வேலி அமைக்க அந்ந பர் முயற்சி செய்தார். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பி.பாலகி ருஷ்ணன் தலைமையில் அனைத்து கட்சி நிர்வாகிகள், ஊர்ப் பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர். இதைத்தொடர்ந்து நிலம் அபகரிக்கும் முயற்சியை அதி காரிகள் தடுத்து நிறுத்தினர். மேலும், நட்டு வைத்த வேலிக்கற்களை அப்ப குதி மக்கள் பிடுங்கி எறிந்தனர்.