tamilnadu

img

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களை சாதிரீதியாக திட்டிய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுத்திடுக.... இந்திய மாணவர் சங்கத்தினர் மனு...

சேலம்:
சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் மாணவர்களை சாதிரீதியாக திட்டிய பெரியார் பல்கலைக் கழகத்தின் தாவரவியல் துறை பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், சேலம் மாவட்டத் தலைவர்பி.பகத்சிங் ஆகியோர் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, சேலம் பெரியார் பல்கலைக்கழக தாவரவியல் பேராசிரியராக பணியாற்றி வருபவர் செல்வம். இவர், தனதுதுறையில் பணியாற்றும் சக பேராசிரியர்கள் மற்றும் மாணவ,  மாணவிகளிடம் தொடர்ந்து சாதிரீதியான அணுகுமுறையை மேற்கொண்டு வருகிறார்.மேலும், மாணவர்களை அடிக்கடி தகாத வார்த்தைகளால் திட்டி மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏற்கனவே இந்த பேராசிரியர் மீதுஏராளமான குற்றச்சாட்டுகள் இருந்துவருகிறது.

குறிப்பாக  அவர் பணி நியமனம் மற்றும் கல்வித்தகுதி உள்ளிட்டவிபரங்கள் போலியானவை என்றகுற்றச்சாட்டு எழுந்தது.இது தொடர்பான வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவர் கடந்தஆண்டு பல்கலைக்கழக மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும்  கூறப்படுகிறது. இதுபோன்ற செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் சம்பந்தப்பட்ட  பேராசிரியர் மீது பல்கலைக்கழக நிர்வாகம் உரியநடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. 

எனவே, சம்பந்தப்பட்ட பேராசிரியர் செல்வம் மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் செய்ய வேண்டும். காவல்துறையின் மூலம் சட்டரீதியாக கைது செய்ய வேண்டும்.  மேலும், சாதிரீதியான தாக்குதலுக்கு உள்ளான மாணவ, மாணவிகளுக்கு சட்டரீதியான உரிய இழப்பீடு கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும். பல்கலைக்கழகத்தில் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கான புகார் அளிப்பதற்கான தனிப் பிரிவை உருவாக்கி மாணவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருக்கிறது.