இளம்பிள்ளை, ஜூன் 11- இளம்பிள்ளை அருகே திருட்டு வழக்கில் கைதான இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி யில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே சித்தர்கோவிலை அடுத்த பெருமாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது விவசாய தோட்டத்தில் கடந்த 8 ஆம் தேதி இரவு 5 பேர் கொண்ட மர்ம கும் பல் மின்மோட்டாரை திருடிச் சென்றுள் ளனர். இதையறிந்த உரிமையாளர் மற் றும் அப்பகுதி மக்கள் இரும்பாலை காவல் நிலையத்திற்கு தகவலளித்தனர். தகவலறிந்து வந்த காவல் துறையினர் சம்பந்தப்பட்ட 5 பேரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், சிறையில் அடைக்கும் முன்பு இவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது கைதான ஐவரில், இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டதால், அவர்கள் இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டனர். உடனிருந்த மூவரை தனிமைப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து அவர்கள் வசிக் கும் பகுதியான இடங்கணசாலை பேரூ ராட்சி, மெய்யனூர் பனங்காடு பகுதியைச் சுற்றிலும் வெளிநபர்கள் யாரும் உள்ளே வராத அளவிருக்கு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டது. மேலும் அவர்களை கைது செய்த காவல் துறையினர் மற்றும் அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதும் மருத்துவக் குழுவினர் மற்றும் சுகாதாரத் துறையினரால், கொரோனா ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் இளம்பிள்ளையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.