சென்னை:
தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே தொடரும் என்றுபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மத்திய பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதில் இந்தி மொழியை திணிக்க பாஜக அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டுகின்றனர்.
இதற்கிடையில், தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கையே தொடர்ந்து நீடிக்கும் என்றும், மும்மொழி கொள்கையை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் இரு மொழி கொள்கையே தொடரும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் இரு மொழி கொள்கையேதொடரும். புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக அரசின்குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. கூடுதல் மாணவர் களுக்கு தேவையான வகுப்பறைகளும், ஆசிரியர்களும் அரசு பள்ளியில் உள்ளனர் என்று தெரிவித்தார்.