tamilnadu

img

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு மருத்துவ மாணவர்கள் கண்களை கட்டி ஆர்ப்பாட்டம்

சேலம், ஆக.14- மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான மசோ தாவை நிறைவேற்றி யுள்ளது. இதனைக் கண் டித்து, நாடு முழுவதும்  மருத்துவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசு மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில், சேலம் அரசு மருத் துவக்கல்லூரி மாணவர் கள் பயிற்சி வகுப்பை புறக் கணித்து 5ஆவது நாளாக புதனன்று கண்களை கருப்பு துணியால் கட்டி  ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதில், நூற் றுக்கும் மேற்பட்ட மருத்துவ  மாணவர்கள் கலந்து கொண் டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, இந்த தேசிய  மருத்துவ ஆணைய மசோ தாவில் அறிவித்தபடி, நுழைவுத் தேர்வில் வெற்றி பெற் றால் மட்டுமே மருத்துவர்களாக பணி புரிய முடியும் என்பது கண்டனத்திற் குரியது. ஏற்கனவே பள்ளி மாணவர்கள்  மருத்துவம் படிப்பதற்கு நீட் தேர்வு உள்ள  நிலையில், நெக்ஸ்ட் நுழைவுத் தேர்வை  அறிவித்தது கண்டனத்துக்குரியது என  தெரிவித்தனர்.
 தருமபுரி 
இதேபோல், தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து  புதனன்று அரசு தருமபுரி  மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.