tamilnadu

img

இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு பழங்குடியின மக்கள் குடியேறும் போராட்டம்

சேலம், ஜூலை 9- ஏற்காட்டில் இலவச வீட்டும னைப் பட்டா கேட்டு பழங்குடி மக் கள் வியாழனன்று குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சேலம் மாவட்டம், ஏற்காடு அடுத்த மஞ்சக்குட்டை ஊராட்சி, அசம்பூரில் வருவாய் துறைக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் இடம் உள்ளது. இந்த இடத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பழங்குடியின மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடிசை அமைத்துத் தங்கி வரும் நிலையில், அவ்வி டத்திற்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கிடையே, இவ்விடத்தை அரசு அதிகாரிகள் துணையுடன் தனியார் எஸ்டேட் ஆக்கிரமிப்பு செய்து இவர்களு டைய குடிசைகளை அவ்வப்போது அகற்றி வந்துள்ளனர்.  இந்நிலையில், ஆவேசம டைந்த பழங்குடியின மக்கள் வியாழனன்று அப்பகுதியில் குடிசை அமைத்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்களது இடத்திற்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டுமெனவும், தனி யார் எஸ்டேட்டாளர்களுக்கு அதிகாரிகள் துணை போக்க்கூடாது எனவும் முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் போராட்டத் தில் ஈடுபட்டவர்களிடையே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப் போது அதிகாரிகள் முன்னுக்குப் பின்னாக பதிலளித்ததால் பழங்கு டியின மக்களில் ஒருவர் தீக்கு ளிக்க முயன்றார். இதனால் அப்பகு தியில் மேலும் பதற்றமான சூழல் ஏற்படவே அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின் றனர்.