சேலம், ஜூலை 24- விவசாய நிலங்களை அழித்து போடப்படும் எட்டு வழிச் சாலை திட்டம் மற்றும் தமிழகத்தில் அணுக் கழிவு கள் கொட்டப்படுவதை தடுக்க வலியுறுத்தி சேலம் கலாம் நண்பர்கள் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம்- சென்னை இடையிலான 8 வழிச் சாலை திட்டம் செயல் படுத்தப்பட்டால் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள், மரங்கள் என அனைத்தும் அழிந்துவிடும். ஆகவே விவசாய நிலங்களை அழித்து செயல்படுத்தப்படும் எட்டு வழிச் சாலை திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும். தமிழகத்தில் உள்ள விவசாய நிலங்களில் ஸ்டெர்லைட் போன்ற ஆலைகளிலிருந்து வெளியேற் றப்படும் நச்சு கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சேலம் கலாம் நண்பர்கள் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கலாம் நண்பர்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் கலாம் செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் மத்திய, மாநில அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.