tamilnadu

மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று

இளம்பிள்ளை, ஜூலை 13- சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் 3 பெண் கள் உட்பட 7 நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்புக் குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஊராட்சிக்குட்பட்ட எர்ணாபுரம் பகுதியில் 3, இடங்கணசாலை பேரூராட்சி  காந்திநகர் 2,  நடுவனேரி ஊராட்சி மற்றும் ஏகாபுரம் ஊராட் சிக்குட்பட்ட தைலாம்பட்டியில் தலா ஒருவருக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் சேலம் அரசு மருத்துவ மனை மற்றும் சீரகாபாடியில் உள்ள அன்னபூர்ணா தனி யார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 இந்நிலையில், மகுடஞ்சாவடி வட்டாரத்தில் 100க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள் ளப்பட்டுள்ளது.

மேலும், சுகாதாரத் துறையினர் நோய்  பர வாமல் தடுக்கும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து மாத் திரைகள் வழங்கினர். இதையடுத்து அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தனிமைப்படுத்தல் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.