இராமநாதபுரம், ஜூன் 10- ஆட்டோ தொழிலாளர்களுக்கு தமிழக அரசு நிவாரணமாக ரூ.15,000 வழங்க வேண் டுமென தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அமைப்பின் மாநி லத்தலைவர் வி.குமார், பொதுச்செயலாளர் எம்.சிவாஜி ஆகியோர் செவ்வாயன்று விடுத்துள்ள அறிக்கை:- தமிழகம் முழுவதும் 60 நாட்களும், சென் னையில் 70 நாட்களும் முடங்கிக் கிடந்த ஆட்டோ தொழிலாளர்கள் ஆட்டோக்களை இயக்கத் தொடங்கிங்கியுள்ளனர். தமிழ் நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் நடத்திய போராட்டத்திற்கு பின்பே ஆட்டோக் கள் இயக்க தமிழக அரசு அனுமதி கொடுத்தது. மழைவிட்டும் தூவானம் விடாத குறை யாக ஆட்டோக்கள் இயங்குகிறது.
சவாரி கிடைக்கவில்லை. சவாரி கிடைக்காததால் வருமானம் இல்லை. ஆட்டோ தொழிலாளி களின் வறுமையும், துன்பகரமான வாழ்க் கையும் மாறவில்லை. கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி கொடுக்கின்றனர். வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் அரசின் உத்தரவுகளை மீறி பணம் கட்ட நெருக்கடி கொடுக்கின்றன. இத னால் கும்பகோணத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். அவர் எழுதி வைத்த கடிதத்தில் ஆட்டோக்களுக்கு கடந்த காலம் போல சவாரி இல்லை. வாங்கி யக் கடனை கட்டமுடியாமல் தற்கொலை செய்து கொள்வதாக எழுதியதியுள்ளார். இதிலிருந்து ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்க்கை எவ்வளவு நெருக்கடியில் இருக்கிறது என்பதை அறியமுடியும். கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள ஆட்டோ தொழிலாளர்களின் அவலம் நிறைந்த வாழ்க்கையை சமாளிக்க அரசாங்கம் ஒவ்வொரு ஆட்டோ தொழிலாளியின் குடும் பத்திற்கும் நிவாரணமாக ரூ.15,000 வழங்க வேண்டும்.