tamilnadu

img

வாழ்வாதாரத்தை இழக்கும் நாட்டுப்படகு - சிறுதொழில் மீனவர்கள் பல ஆண்டுகளாக விதியை மீறி, மீன்பிடி தடைக்காலம் முடியும் முன்பே கடலுக்குச் செல்லும் விசைப்படகுகள்

இராமநாதபுரம், ஜூன் 14- பல ஆண்டுகளாக விதியை மீறி,  மீன்பிடி தடைக்காலம் முடியும் முன்பே கடலுக்கு மீன்பிடிக்கச் செல்  லும் விசைப்படகுகளால் நாட்டுப்  படகு மற்றும் சிறுதொழில் மீன வர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்  படுகிறது. இப்பிரச்சனையில் இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட ஆட்சியர் நிர்வாகங்கள் மற்றும் மீன்வளத்துறை நிர்வாகம் உடனடி யாக தலையிட்டு சரிசெய்திட வேண்  டும் என்று தமிழ்நாடு மீன்பிடித் தொழிலாளர் கூட்டமைப்பு (சிஐ டியு) வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து கூட்டமைப்பின்  மாநில செயல் தலைவர் எம்.கருணாமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: இராமநாதபுரம், புதுக் கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 5 மாவட்டங்களிலும் மீன்பிடி தடை காலம் ஜூன் 14 இரவு 12 மணியுடன் நிறைவு பெறும் சூழலில் முறைப்படி இப்படகுகள் அனைத்தும் ஜூன் 15 ஆம் தேதி  காலை 6 மணிக்கு மேல் தான்  செல்ல வேண்டும். அப்படி செல் வதுதான் அவர்களுக்கும் லாபம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த 5 மாவட்ட விசைப்படகுகளும் ஜூன் 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு  மேல் செல்வது வருடம் தோறும் நடக்கும் விதிமுறை மீறல்.  பொதுவாக மீன்பிடி தடைக்  காலம் அரசால் அமல்படுத்தப்படும் நோக்கமே மீனவர்களின் நலனை முன்னிறுத்தித்தான். இந்த காலங்க ளில் தான் மீன்களின் இனப்பெருக் கம் அதிகரிக்கும் காலமாகும். இத னைத்தொடர்ந்து கடலுக்கு சென்  றால் கூடுலான மீன்கள் கிடைக்கும். கூடுதலான லாபமும் கிடைக்கும். ஆனால் நடப்பது என்ன?

ஏற்றுமதி நிறுவனங்களின் சிண்டிகேட் மோசடி
கூடுதலான மீன்கள் கிடைக்கும். ஆனால் அதை அடிமாட்டு விலைக்கு (குறைத்து) ஏற்றுமதி நிறுவனங் கள் சிண்டிகேட் அமைத்து கொள்  முதல் செய்யும். இதனால் லாபம்  அடைவது ஏற்றுமதி நிறுவனங்கள்  தான். மேலும் நண்டுகள் உயிருடன் பிடித்து வரப்பட்டால் ஏற்றுமதிக்கு உகந்ததாக இருக்கும். ஓரளவு நியாயமான விலைக்கும் அதை விற்கமுடியும். பொதுவாக நண்டு களை அதிகபட்சம் ஒரு நாள் வரை தான் உயிருடன் பாதுகாக்க முடி யும். ஆனால் ஒரு நாள் முன்கூட் டியே கடலுக்கு செல்வதால் அந்த  நண்டுகளை உயிருடன் பாதுகாத்து கொண்டுவர இயலாது. அப்படி  வரும் நண்டுகள் ஏற்றுமதிக்கு  கொள்முதல் செய்யப்படமாட் டாது. எனவே அந்த நண்டுகளை உள்ளூர் மார்க்கெட்டுகளில்தான் விற்க முடியும். அதனால் அது  ஒன்றுக்கு பாதியான விலைக்குத் தான் விற்கமுடியும் அதே போல் இறால், கணவாய், ஆக்டோபஸ் போன்ற ஏற்றுமதி ரக மீன்களை பதப்படுத்தி பாதுகாப்பதிலும் இதே நிலைதான் ஏற்படும். இத னால் இரண்டு மாதம் தொழில் நிறுத்தம் செய்து கஷ்டப்பட்டு வளர்க்கும் மீன்களை முறையான விலைக்கு விற்கமுடியாமல் போவது எந்த வகையில் பொருத்த மாகும்.  இதற்கிடையில் இலங்கை கடற்படை கெடுபிடி மற்றும் கடுமை யான டீசல் விலை உயர்வு, மீன்  பிடி வலைகள் மற்றும் இதர இடு பொருட்களின் விலை உயர்வு, இவற்றுடன் ஒன்றிய அரசின் கடு மையான ஜிஎஸ்டி வரி உயர்வு இவை அனைத்தையும் தாண்டி தொழில் செய்து லாபம் சம்பாதிக்க வேண்டும். லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று சொல்வதைவிட இந்த காலங்களில் படகுகளை மராமத்து செய்யவும் தங்களின் இரண்டு மாத வாழ்வாதாரத்தை தொடர வாங்கிய கடன்களை திரும்பச்செலுத்த வேண்டும். அதற்கு மேல் சம்பாதித்தால்தான் உண்டு.  இது போன்ற விசயங்களை கணக்கில் கொண்டுதான் இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதி விசைப்படகு மீனவர்கள் தங்  கள் படகுகளை காலை 10 மணிக்கு  மேல்தான் கடலுக்கு அனுப்புவது என்ற முடிவையும் சமீபத்தில் எடுத்திருந்தனர்.

விதிமீறலுக்கு துணைபோகும் மீன்வளத்துறை
தற்போது அவை அனைத்தை யும் புறந்தள்ளிவிட்டு முன்கூட்டியே கடலுக்கு சென்று விடுவர். இந்த  அத்துமீறலை மீன்பிடி தடைகாலம்  அறிவிக்கப்பட்டது முதல் தொட ர்ந்து பல ஆண்டுகளாக செய்து வரு கின்றனர். இந்த ஒழுங்கு முறை  மீறிய நடவடிக்கைக்கு மீன்வளத் துறையும் துணைபோவது வேத னையிலும் வேதனையாக உள்ளது. அனுமதி சீட்டு பெறாமல் கடலுக்கு  சென்ற படகுகள் மீது ஏதேனும் ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அந்த நடவடிக்கையை  ரத்து செய்ய வேண்டும் என விசைப்  படகு தரப்பினர் கோரிக்கை வைத்து  போராட்டம் நடத்துவதும், அதனை  தொடர்ந்து ஆளும் தரப்பினர் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள சொல்லி மீன்வளத்துறையை நிர்ப்பந்திப்பதும் அதனை மீன் வளத்துறை ஏற்றுக்கொள்வதும் மிக மோசமான நடைமுறையாக பல வருடங்களாக இருந்து வரு கிறது.  இதுபோன்று விசைப்படகுகள் முன்கூட்டியே கடலுக்கு செல்வது என்பது மீன்பிடிப்புக்கு செல்வ தாக கருத முடியாது. மாறாக மீன்  அழிப்புக்கு செல்வதாகவே கருத வேண்டும்.  மேலும் கூடுதலான அளவில் மீன்கள் கிடைக்கும் பொழுது அதனை பதப்படுத்துவதற்கு போது மான ஐஸ் கட்டிகள் கிடைக்காமல் மீன்கள் அதன் தரத்தை இழந்து விடும். பல நேரங்களில் முழுமை யாக கெட்டும் போகும். இந்த சூழ்நிலையில் முதல் நாள் கிடைக் கும் மீன்களை விட மறுநாள் மிக  குறைவாகவே மீன்கள் கிடைக்கும். அப்போதும் முதல் நாள் கொடுத்த விலையையே ஏற்றுமதியாளர்கள் தருவர். இதனால் ஏற்படும் இழப்பு  மிகவும் வேதனையான ஒன்றா கும்.  இதனால் பாதிக்கப்படுவது விசைப்படகு மீனவர்கள் மட்டு மல்ல. பாரம்பரிய முறையில் மீன் பிடிப்பு செய்து தங்கள் வாழ்வா தாரத்தை தொடர்ந்து வரும் நாட்டுப்  படகு மற்றும் சிறுதொழில் மீன வர்களும் தான்.   எனவே மீனவர் நலன் காக்க  இந்த ஆண்டாவது 5 மாவட்டங்களி லும் உள்ள மீன்வளத்துறை நிர்வா கங்கள் ஒரே நேரத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் முறைப்படுத்  தினால் நல்லது . இது விசயத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் நிர்வா கங்களும் மாநில மீன்வளத்துறை யும் தலையீடு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.