இராமநாதபுரம், ஜூன் 2-இராமநாதபுரம் அருகே கவரங்குளம் மற்றும்பாப்பாகுடி கிராமத்தினரை தமிழ்நாடுதீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் மற்றும் எஸ்.சி., எஸ்.டி., அமைப்பு, மருதம்மக்கள் இயக்கம், தமிழ்ப் புலிகள் அமைப்பினர் மற்றும் சமூக விடுதலை முன்னணி ஆகியோர் இருகிராமத்தினரையும் நேரில் சந்தித்துகடந்த மே 19 சம்பவங்களை கேட்டறிந்து இருகிராமத்தினருக்கும் இடையே சுமூக சூழ்நிலைஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்புமுன்னணி இராமநாதபுரம் மாவட்டச்செயலாளர் என்.கலையரசன் தெரிவித்ததாவது:கடந்த மே 19 ஆம்தேதி இரவு இராமநாதபுரம் அருகே உள்ள கவரங்குளம் கிராமத்து தலித்இளைஞர்கள் ஒரு சிலர் பாப்பாக்குடி அருந்ததியஇளைஞர்களை கடுமையாக தாக்கியதுடன் அருந்ததிய வீடுகளை உடைத்தும் இரு சக்கர வாகனங்களை சேதப்படுத்தி உடைத்துள்ளனர் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து காவல்துறை வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகிறது. இருப்பினும் கவரங்குளம் மற்றும் பாப்பாகுடி பகுதி மக்களிடையே பதற்றமும், அச்சமும் நீடிக்கிறது.இந்நிலையில் வெள்ளியன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் கே.சாமுவேல்ராஜ், செல்லக்கண்ணு, என்.கலையரசன், இ.கண்ணகி, வான்தமிழ் இளம்பரிதி, எஸ்.சி., எஸ்.டி. அமைப்பு நிர்வாகிகள் கர்ணன், சேக்கிழார், பூமிநாதன், ரகுமான் (மருதம் மக்கள் இயக்கம்), தமிழ்ப் புலிகள் இயக்கநிர்வாகிகள் தமிழ்முருகன், சதீஷ், சமூக விடுதலை முன்னணி ராஜசேகர் ஆகியோர் பாப்பாகுடி கிராமத்தினரை சந்தித்தனர்.
பாதுகாப்பு வேண்டும்
பாப்பாகுடி அருந்ததியின மக்கள், தலைவர்களிடம் கூறும்போது, கவரங்குளத்து இளைஞர்களால் தாக்கப்பட்ட வீடு, வாகனம் ஆகியவற்றுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதுடன் தொடர்ச்சியாக எங்கள் ஊரில் உள்ளபெண்களை, கவரங்குளம் இளைஞர்கள் கேலிசெய்தல், பாப்பாகுடி இளைஞர்களை தாக்குதல் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பு வேண்டும் எனக் குறிப்பிட்டனர்.தலைவர்கள் கவரங்குளம் சென்ற போது,இப்பிரச்சனையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், முயற்சித்து சுமூகப்படுத்தி பதற்றத்தை தணிக்க முயற்சிப்பது திருப்தியளிப்பதாக குறிப்பிட்டனர். பாப்பாகுடி அருந்ததிய இளைஞர்களை தாக்கிய ஒரு சில கவரங்குளம் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கநாங்கள் குறுக்கே நிற்கவில்லை. ஆனால் கடந்த 19 ஆம்தேதியிலிருந்து பதற்றமும், அச்சமுமாக காவல்துறை நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகிறோம். காவல்துறையின் கெடுபிடிகளை தவிர்த்து அமைதியான சூழ்நிலையை உருவாக்கிட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.