நாமக்கல், ஜூலை 13- முறையான கலந்தாய்வு நடத்த வேண் டும் என வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம் பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நாமக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அங்கன்வாடியில் பணி அமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மாறுதல் மறுக்கப்பட்டதை கைவிட வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் 17B பெற்றவர்களுக்கு மாறுதல் பெற வாய்ப்பு மறுக்கப்பட்டதை வாபஸ் பெற வேண் டும். ஆசிரியர் விரோத பொது மாறுதல் நெறிமுறைகளை கண்டித்தும். நடை பெற்ற கலந்தாய்வு மாறுதல் மற்றும் பதவி உயர்வுகளை ரத்து செய்ய வேண் டும். நியாயமான கலந்தாய்வு நெறிமுறை களின் அடிப்படையில் மீண்டும் முறை யான கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கை களை சனியக்று வலியுறுத்தி நாமக் கல் பூங்கா சாலை முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மா.கலைச்செல்வன் தலைமை வகித்தார். பள்ளிபாளையம் வட்டாரச் செயலாளர் ப.பெரியசாமி வர வேற்றார். பரமத்தி வட்டார செயலாளர் சி.முருகேசன், கபிலர்மலை வட்டார செயலாளர் இல.கண்ணன், மோக னூர் வட்டார செயலாளர் க.அத்தப்பன்.ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் இரா.மாதேஷ் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை யாற்றினார். முடிவில் எருமப்பட்டி வட்டார அமைப்பாளர் மு.சீ.நல்லமுத்து நன்றி கூறினார்.